‘அம்மாடியோவ்! பிரபல இந்திய நகரத்தில்’... ‘அந்தரத்தில் உணவகம்’... 'இவங்களுக்கு மட்டும் அனுமதி இல்ல'!

முகப்பு > செய்திகள் > லைப்ஸ்டைல்

By Sangeetha | Oct 08, 2019 10:34 PM

அந்தரத்தில் எப்படி பறக்க வேண்டும் என்று ஆசைப்படுவோமோ, அதுபோல் அந்தரத்தில் அமர்ந்து சாப்பிட நினைப்பவர்களுக்காக அமைக்கப்பட்டுள்ளது  உணவகம் ஒன்று. அதுவும் இந்தியாவின் முக்கிய நகரத்தில்.

this Noida restaurant serves food 160 feet up in the air

துபாய் போன்ற நாடுகளில் உள்ளது அந்தரத்தில் அமர்ந்து சாப்பிடக்கூடிய உணவகங்கள். ஆனால் இந்தியாவில் இதுபோன்ற உணவகம் பெங்களூரில் மட்டுமே உள்ளது. இந்நிலையில், உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில், தரையிலிருந்து சுமார் 160 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த உணவகம், அட்வென்ஜர் விரும்பிகளை வெகுவாக கவர்ந்துள்ளது.

துபாயில் உள்ள அந்தரத்தில் தொங்கும் உணவகம் ஒன்றில் உணவருந்திய நொய்டாவைச் சேர்ந்த நிகில்குமார், தான் அனுபவித்த அந்த அனுபவத்தை, தனது மக்களும் அனுபவிக்க வேண்டும் என்று திட்டமிட்டுள்ளார். இதையடுத்து நொய்டா செக்டர் 38 என்ற இடத்தில் 'பிளை டைனிங்' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த உணவகத்தை அவர் தற்போது அமைத்துள்ளார். மக்களின் பாதுகாப்பை கவனத்தில்கொண்டு, கடந்த 2 வருடங்களாக இந்த உணவகத்தை அமைக்க அவர் எடுத்துக்கொண்டார்.

ஜெர்மனி நாட்டின் தரச்சான்றிதழை பெற்ற உபகரணங்களால் நிறுவப்பட்டுள்ள பிளை டைனிங் உணவகம், மொத்தம் 24 இருக்கைகளை கொண்டது. துபாயிலிருந்து கொண்டுவரப்பட்டுள்ள கிரேன் மூலமாக, உணவருந்த வருவோர், மேலே தூக்கிச் செல்லப்பட்டு உணவு வழங்கப்படுகிறது. நபர் ஒருவருக்கு, 2499 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. 160 அடி உயரத்தில் அமைந்துள்ளதால் கர்ப்பிணி பெண்களோ, 4 அடி உயரத்துக்கு குறைவான குழந்தைகளோ பாதுகாப்பு கருதி இந்த உணவகத்தில் அனுமதிக்கப்படுவதில்லை. 

 

Tags : #FLYDINNING #NOIDA #160FT #RESTAURANT