“சாதி, மதம் கடந்து மேரேஜ் பண்றவங்கள பாத்துக்குறது அரசோட கடமை!’.. “அதனால அவங்களுக்கு”.. அனல் பறக்கும் அறிவிப்பு!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Siva Sankar | Mar 05, 2020 06:29 PM

சாதி மதம் கடந்து திருமணம் செய்து கொள்பவர்கள் தங்களுடைய சொந்த சமூகத்தினராலேயே ஏற்றுக்கொள்ளப்படாமல் புறக்கணிக்கப்படும் நிலை ஏற்பட்டால் அவர்களை பாதுகாப்போடு தங்க வைப்பதற்காக பாதுகாப்பு இல்லங்கள் தொடங்கப்பட உள்ளதாக கேரள அரசு அதிரடியாக அறிவித்துள்ளது.

kerala to open safe home for inter-caste couple

சமீபத்தில் கேரளாவின் கோட்டயம் மாவட்டத்தில் 23 வயதான, பட்டியல் இனத்தைச் சேர்ந்த கிருஸ்தவர் ஒருவர் தன்னுடைய உயர்ஜாதி மனைவியின் உறவினர்களால் கடத்தப்பட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. தங்களுடைய சாதி, மதம் கடந்து திருமணம் செய்து கொண்டவர்கள் இப்படியான அச்சுறுத்தல்களை தொடர்ந்து எதிர்கொள்ளக் கூடிய சூழல் ஏற்படுவதால் இவற்றைத் தவிர்ப்பதற்காக கேரள அரசின் புதிய திட்டமான பாதுகாப்பு இல்லம் என்கிற திட்டத்தை சமூகநீதித் துறை அமைச்சர் கே.கே.ஷைலஜா தொடங்கி வைத்து பேசியுள்ளார்.‌

அதன்படி சாதி, மதம் கடந்து திருமணம் செய்து கொள்ளக்கூடிய தம்பதியர் புறக்கணிப்பு மற்றும் ஆணவப்படுகொலை உள்ளிட்ட பல்வேறு தாக்குதல்களுக்கு ஆளாகும் சூழ்நிலை இருப்பதால், அவர்களை பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை என்றும் அவர் கூறியுள்ளார்.  இதற்கென அவர்களுக்கான அனைத்து மாவட்டங்களிலும் ஓராண்டு வரை அவர்கள் தாங்கிக் கொள்ளக் கூடிய பாதுகாப்பு இல்லங்களை அமைக்க ஆரம்பகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், இவர்களில் யாரேனும் அரசுப்பணியில் இருந்தால் அவர்கள் விரும்பும் இடத்திற்கு பணியிடமாற்றம் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Tags : #KERALA