'காப்பாத்த போனவங்களே நடுங்கி நின்னுட்டாங்க'... 'கதறி துடித்த டீச்சர்'... நெஞ்சை பதற செய்யும் கோரம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Jeno | Mar 04, 2020 12:03 PM

வீட்டிற்குள் படுத்திருந்த ஆசிரியரை நாய்கள் கடித்துக் குதறியுள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Kerala : Retired Teacher mauled to death by stray dog in Alappuzha

கேரள மாநிலம் ஆலப்புழா அருகே உள்ள ஹரிப்பாடு வடக்கேகாடு பகுதியைச் சேர்ந்தவர் பரமேஸ்வரன் நாயர். இவரது மனைவி ராஜம்மாள். இருவரும் ஆசிரியர்களாக இருந்து ஓய்வு பெற்றவர்கள். இந்த தம்பதியரின் பிள்ளைகளுக்கு திருமணமாகி வெளியூரில் வசித்து வருகிறார்கள். இதனிடையே ராஜம்மாளின் கணவர் பரமேஸ்வரன் இறந்து விட்ட நிலையில், ராஜம்மாள் மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். அவரது பிள்ளைகள் மற்றும் உறவினர்கள் அவ்வப்போது வந்து பார்த்துச் செல்வது வழக்கம்.

இந்நிலையில் நேற்று பகல் ராஜம்மாள் தனது வீட்டில் உள்ள கட்டிலில் படுத்துத் தூங்கிக்கொண்டிருந்தார். அவரது வீட்டுக் கதவு சரியாகச் சாத்தப்படாமல் இருந்துள்ளது. இந்தச்சூழ்நிலையில் திடீரென்று வீட்டில் இருந்து ராஜம்மாளின் அலறல் சத்தம் கேட்டது. இதனால் அக்கம், பக்கத்தினர் அங்கு ஓடிச் சென்று பார்த்தனர். அங்கு அவர்கள் கண்ட காட்சி அவர்களை அதிர்ச்சியில் உறையவைப்பதாக இருந்தது.

வீட்டில் படுத்திருந்த ராஜம்மாளை அவரது வீட்டிற்குள் புகுந்த தெரு நாய்கள் கடித்துக் குதறிக் கொண்டிருந்தது. உடனடியாக அவர்கள் அந்த நாய்களை அடித்து விரட்டி விட்டு ராஜம்மாளை மீட்டனர். பிறகு அவரை சிகிச்சைக்காக அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு ராஜம்மாளை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர். இதற்கிடையே கேரளாவில் தெரு நாய்கள் அட்டகாசம் அதிகமாக உள்ளது. சாலையில் நடந்து செல்லும் பெரியவர்கள், குழந்தைகள் என்று பலரும் தெரு நாய்கள் கடித்து உயிரிழந்து உள்ளனர்.

தற்போது வீட்டிற்குள் இருந்தவரையே தெரு நாய்கள் கடித்துக் குதறியுள்ள சம்பவம் அந்த பகுதி மக்களை அதிர்ச்சியில் உறைய செய்துள்ளது.

Tags : #KERALA #DOG #ELDERLY WOMAN #STRAY DOG #DEATH #TEACHER