‘கல்லூரியில் படிக்கும்போதே வேலைக்கு செல்லலாம்’... ‘ஒப்புதல் வழங்கிய அரசு’... ‘மகிழ்ச்சியில் மாணவர்கள்’... விபரங்கள் உள்ளே!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Sangeetha | Mar 05, 2020 06:42 PM

படிக்கும் காலத்தில் பகுதி நேரமாக வேலை செய்ய வேண்டும் என்ற சூழல் மாணவர்களிடையே நிலவினாலும் அதற்கான முறையான வழிவகை இல்லாததால், வருமானத்திற்காக பல மாணவர்கள் படிப்பை கைவிடுவது வழக்கம்.

Government accept, to take up part-time jobs while pursuing education

இந்நிலையில், கல்லூரி மாணவர்கள் படிக்கும்போதே பகுதிநேர வேலைக்குச் செல்லும் திட்டத்துக்குக் கேரள மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள சம்பவம் மாணவர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. 18 வயது முதல் 25 வரையுள்ள மாணவர்கள் படிக்கும்போதே வேலைக்குச் செல்வதற்காக அரசுத்துறைகள், உள்ளாட்சி அமைப்புகள், பொதுத்துறை, தனியார் நிறுவனங்களில் ஆண்டுக்கு 90 நாட்கள் பணி உத்தரவாதம் அளிக்கக் கேரள அரசு திட்டமிட்டுள்ளது.

இதில் கிடைக்கும் மதிப்பூதியம் மாணவர்களின் படிப்புச் செலவுக்கும் குடும்பத் தேவைக்கும் உதவும். மாணவர்களுக்கு வேலைக்குச் செல்லும் பழக்கம் ஏற்படுவதுடன் அவர்களின் பணித்திறன் மற்றும் திறமையும் இதனால் மேம்படும். இந்தப் புதிய திட்டத்துக்குக் கேரள அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்துள்ளது.