VIDEO: ‘அதுவும் நம்மள மாதிரி ஒரு உயிர் தானே’.. ‘ஒட்டுமொத்த அன்பையும் அள்ளிய தாத்தா’.. வைரல் வீடியோ..!
முகப்பு > செய்திகள் > இந்தியாநாயின் தாகத்தைப் போக்க தண்ணீர் குழாயில் இருந்து கையால் நீர் பிடித்துக் கொடுத்த முதியவரின் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அனைவரது மனதையும் கவர்ந்துள்ளது.

வனத்துறை அதிகாரி சுசாந்தா நந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் நாய் ஒன்றிற்கு தண்ணீர் கொடுக்கும் முதியவரின் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் தெருநாய் ஒன்று தாகத்துடன் தவித்துக்கொண்டு இருந்துள்ளது. இதைப் பார்த்த முதியவர் ஒருவர் அருகில் உள்ள தண்ணீர் குழாயில் கைகளால் தண்ணீரை பிடித்து அதை நாய்க்கு குடிக்க கொடுக்கிறார். 19 விநாடிகள ஓடும் அந்த வீடியோவில் தன்னால் முடிந்த அளவுக்கு பலமுறை கைகளால் தண்ணீர் நிரப்பி அந்த முதியவர் நாய்க்கு குடிக்கக் கொடுக்கிறார்.
இதுகுறித்து பதிவிட்டுள்ள வனத்துறை அதிகாரி சுசாந்தா நந்தா, ‘உங்களுக்கு ஒருபோதும் திருப்பி செலுத்த முடியாத ஒருவருக்காக நீங்கள் ஏதாவது செய்யும் உதவியால் உங்கள் நாளில் நீங்கள் வாழவில்லை. இன்று உதவி செய்வதில் கருணையுடன் இருங்கள்’ என பதிவிட்டுள்ளார். தள்ளாத வயதில் தெருநாய்க்கு கையில் தண்ணீர் நிரப்பி தாகம் தீர்த்த முதியவரின் வீடியோ இணையத்தில் வைரலாகி பலரது அன்பையும் பெற்று வருகிறது.
You have not lived ur day, until you have done something for someone who can never repay you🙏🏼
Be compassionate in what you today. pic.twitter.com/SK7zXjCxnc
— Susanta Nanda IFS (@susantananda3) February 25, 2020
