இது கண்டிப்பா ‘அவரோடது’ தான்... ‘ஃபீல்டிங்க’ பாத்தாலே தெரியல... ‘வைரலாக’ பரவும் வீடியோ...
முகப்பு > செய்திகள் > ஃபன் பேக்ட்ஸ்குழந்தைகளுடன் நாய் ஒன்று கிரிக்கெட் விளையாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வரும் இந்த வீடியோவில், சிறுமி ஒருவர் பேட்டிங் செய்ய, நாய் ஒன்று விக்கெட் கீப்பராக செயல்படுகிறது. ஒவ்வொரு முறை சிறுமி பந்தை அடித்தவுடனும் அந்த நாய் வேகமாக பந்தை நோக்கி ஓடுகிறது.
இந்த வீடியோவை ட்விட்டரில் பதிவிட்டுள்ளவர், இந்த நாய்க்கு 2020ஆம் ஆண்டின் சிறந்த ஃபீல்டர் (Best Fielder) என்ற விருதை வழங்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோவை இதுவரை லட்சத்திற்கும் அதிகமானவர்கள் பார்த்துள்ள நிலையில், அதில் பலரும் இது தோனியுடைய நாய் தான் எனக் கூறிவருகின்றனர்.
An award for the Best Fielder of the Year!!👑🥜 pic.twitter.com/7PWBLBgnnV
— Simi Garewal (@Simi_Garewal) February 20, 2020
Tags : #CRICKET #DOG #FIELDER #VIRAL #VIDEO
