கடைக்கு வரும் 'சிறுமிகளுக்கு' மிட்டாய் கொடுத்து... 'தனியறைக்கு' அழைத்துச் சென்று... 'பதற' வைக்கும் '70 வயது' முதியவரின் 'செயல்'...
முகப்பு > செய்திகள் > தமிழகம்திருவண்ணாமலை மாவட்டத்தில், மிட்டாய் கொடுத்து 50க்கும் மேற்பட்ட சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டம் கருங்காலி குப்பம் கிராமத்தில், தனியார் பள்ளி அருகே வேலு என்ற முதியவர் பல ஆண்டுகளாக பெட்டிக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவர், கடைக்கு வரும் சிறுமிகளுக்கு இலவசமாக சாக்லேட் மற்றும் மிட்டாய்களை கொடுத்து, கடைக்குள் அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவில் ஈடுபட்டும் வந்துள்ளார்.
ஆனால் சிறுமிகள் இதனை வெளியில் தெரிவிக்காமல் இருந்து வந்துள்ளனர். இந்நிலையில் 5க்கும் மேற்பட்ட சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக முதியவர் மீது புகார் எழுந்தது. இதையடுத்து, குழந்தைகள் நல அமைப்பினர் நடத்திய விசாரணையில் முதியவரின் கோர முகம் வெளி உலகுக்கு தெரியவந்தது.
குழந்தைகள் நல அமைப்பினர் அளித்த புகாரை அடுத்து, முதியவரை கைது செய்த கீழ் பெண்ணாத்தூர் போலீசார், அவரிடம் நடத்திய விசாரணையில். 50க்கும் மேற்பட்ட சிறுமிகளுக்கு அவர் பாலியல் தொந்தரவு கொடுத்தது தெரியவந்தது.
இதுகுறித்த பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோர்கள் வெளிப்படையாக புகார் அளிக்க மறுத்து வரும் நிலையில், 5 சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. பெற்றோர் அளிக்கும் புகார்கள் ரகசியமாக வைக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ள நிலையில், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவித்துள்ளனர்.
