VIDEO: ‘எங்கிருந்து வர்ற’.. ‘முதல்ல ஆதார் அட்டைய காட்டு’.. இளைஞரை ஓங்கி கன்னத்தில் அறைந்த ஆட்டோ டிரைவர்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாஆட்டோ டிரைவர் ஒருவர் ஆதார் அட்டையை காண்பிக்கச் சொல்லி இளைஞரை கண்ணத்தில் அடித்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரளா மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள முக்கோலா என்ற பகுதியில் ஆட்டோ ஓட்டி வருபவர் சுரேஷ். இவர் மேற்குவங்க இளைஞர் ஒருவரிடம் ஆதார் அட்டையை காண்பிக்கச் சொல்லி கண்ணித்தில் அறைந்த வீடியோ இணையத்தில் வெளியானதை அடுத்து போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.
அந்த வீடியோவில், சாலையில் நின்றுகொண்டிருந்த கௌதம் மாண்டால் என்ற மேற்குவங்க இளைஞரிடம் ஆட்டோ டிரைவர் சுரேஷ் கோபத்துடன், ‘நீ யார்? எங்கிருந்து வருகிறாய்? உனது ஆதார் அட்டையைக் காட்டு’ என மிரட்டுகிறார். அதற்கு, ‘முதலில் உங்களது ஆதார் அட்டையை காட்டுங்கள்’ என இளைஞர் தெரிவிக்கிறார். உடனே வேகமாக சென்று ஆட்டோவில் இருந்த தனது ஆதார் அட்டையை சுரேஷ் எடுத்துக் காண்பிக்கிறார்.
இதனை அடுத்து கௌதம் தன் பர்ஸில் ஆதார் அட்டையை தேடுகிறார். அதற்கு ஆட்டோ டிரைவர் சுரேஷ், கௌதமின் கண்ணத்தில் ஓங்கி அறைகிறார். எங்கே உன் ஆதார் அட்டை? எனக் கேட்டுக்கொண்டே மீண்டும் தாக்குகிறார். அப்போது தன்னிடமிருந்த தொழிலாளர் அடையாள அட்டையை கௌதம் எடுத்துக் காட்டினார். உடனே அந்த அடையாள அட்டையை சுரேஷ் பறித்துக்கொண்டு அங்கிருந்து வேகமாக சென்றுவிட்டார்.
இதனை அங்கிருந்த ஒருவர் வீடியோ எடுத்து இணையத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து ஆட்டோ டிரைவர் சுரேஷை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் நடந்த சில நிமிடங்களுக்கு முன்பு சுரேஷ் தனது ஆட்டோவை பின்னோக்கி எடுக்கும்போது கௌதம் மீது தெரியாமல் ஆட்டோ மோதியுள்ளது. இதனால் சுரேஷை பார்த்து கௌதம் முறைத்துள்ளார். இதில்தான் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் சம்பவத்தின்போது ஆட்டோ டிரைவர் சுரேஷ் குடித்திருந்ததாக கூறப்படுகிறது.
