VIDEO: 'யாருமே இல்லாத இடத்தில்... 'ஒற்றை யானை' செய்த நெகிழ்ச்சி சம்பவம்'... இணையத்தில் வைரலாகும்... சிசிடிவி காட்சிகள்!
முகப்பு > செய்திகள் > உலகம்தரையில் கிடக்கும் குப்பைகளை எடுத்து, குப்பைத் தொட்டியில் போடும் யானையின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மனிதர்களாகிய நாம் தான் சுற்றுச் சூழலை மாசுபடுத்துவதும், அதன் மூலம் சுகாதார கேடுகளை விளைவித்து நமக்கும் பிற உயிர்களுக்கும் ஆபத்தை உண்டாக்கி வருகிறோம். பிற உயிரினங்கள் அவ்வாறு செய்வதில்லை.
நமது சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்ள அரசாங்கமும், மற்ற சமூக நல இயக்கங்களும் பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகின்றன. இந்நிலையில், இவற்றை எதையும் அறியாத மிகப்பெரிய பாலூட்டி விலங்கான யானை, தரையில் கிடக்கும் குப்பைகளை தன்னுடைய தும்பிக்கையால் எடுத்து, குப்பைத் தொட்டியில் போடும் வீடியோ ஒன்று இணைய வாசிகளின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
Video Of The Year😯 pic.twitter.com/8DBvXjIGPk
— Naturism.Com💎💎 (@NaturismC) February 24, 2020
Tags : #ELEPHANT #VIDEO #VIRAL
