என்னை மீறி ‘எப்படி’ போகுதுனு பாக்கறேன்... ‘அவுட்’ ஆகாமல் இருக்க வீரர் செய்த ‘வேடிக்கை’ முயற்சியால்... வைரலாகப் பரவும் ‘வீடியோ’...

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Saranya | Feb 26, 2020 06:23 PM

வங்கதேச வீரரான முஷ்பிகுர் ரஹீம் பேட்டிங்கின்போது பந்தை ஸ்டெம்பில் படாமல் தடுக்க முயற்சி செய்யும் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

Video Mushfiqur Rahim Uses His Thigh To Stop Ball Hitting Stump

வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஜிம்பாவே அணி டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. மிர்பூரில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில், பேட்டிங் செய்த முஷ்பிகுர் ரஹீம் ஜிம்பாவே அணியின் வேகப்பந்துவீச்சாளருடைய பந்தை எதிர்கொண்டுள்ளார். அப்போது அவர் தடுத்து விளையாட முயற்சித்தபோது, பந்து அவரைத் தாண்டி பவுன்ஸ் ஆகி ஸ்டெம்பை நோக்கிச் சென்றுள்ளது.

இதையடுத்து பந்து ஸ்டெம்பில் படுவதைத் தடுக்கும் விதமாக ஸ்டெம்பை மறைப்பதுபோல அவர் நின்று கொண்டுள்ளார். அதனால் பவுன்ஸ் ஆன பந்து மீண்டும் பிட்சாகி அவருடைய தொடையில் பட்டு நிற்க, அவர் ஆட்டமிழக்காமல் தப்பித்துள்ளார். பந்தைத் தடுக்க முஷ்பிகுர் ரஹீம் முயற்சிக்கும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்தப் போட்டியில், முஷ்பிகுர் ரஹீம் 5வது விக்கெட்டுக்கு கேப்டன் மோமினுல் ஹக்குடன் இணைந்து 222 ரன்கள் பார்டனர்ஷிப் அமைத்துள்ளார். அத்துடன் முஷ்பிகுர் ரஹீம் மட்டும் இறுதி வரை ஆட்டமிழக்காமல் 203 ரன்கள் குவித்துள்ளார். இது அவருக்கு மூன்றாவது இரட்டைச் சதமாகும். இதன்மூலம் டெஸ்ட் போட்டிகளில் இரண்டு முறை இரட்டைச் சதமடித்த முதல் விக்கெட் கீப்பர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். மேலும் இந்தப் போட்டியில் வங்கதேச அணி இன்னிங்ஸ் மற்றும் 106 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று, முஷ்பிகுர் ரஹீமிற்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டுள்ளது.

 

 

Tags : #CRICKET #MUSHFIQUR RAHIM #VIRAL #VIDEO