8 வருஷத்துக்குமுன் இறந்த பிரபல ‘பாடகி’.. மீண்டும் மேடையில் பாடிய அதிசயம்.. எப்படின்னு கேட்டா ‘ஷாக்’ ஆகிடுவீங்க..!
முகப்பு > செய்திகள் > உலகம்8 வருடங்களுக்கு முன்பு உயிரிழந்த பிரபல பாப் பாடகி விட்னி ஹூஸ்டன் ஹோலோகிராம் தொழில்நுட்பம் மூலம் மீண்டும் மேடையில் தோன்றி பாடினார்.

அமெரிக்காவைச் சேர்ந்த புகழ்பெற்ற பாப் பாடகியான விட்னி ஹூஸ்டன் கடந்த 2012ம் ஆண்டு உயிரிழந்தார். 6 முறை கிராமி விருதுகளை வென்ற இவருக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இந்த நிலையில் அவரது குரலை மறு உருவாக்கம் செய்யும் வகையில் ‘ஹோலோகிராம்’ என்னும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மீண்டும் அவர் பாடுவது போன்று உருவாக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சி இங்கிலாந்தில் உள்ள ஷெபீல்டு நகரில் நடத்தப்பட்டது. நிஜ இசைக்குழு, நடனக் குழு மற்றும் பின்னணி பாடகர்களுடன் நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியில், பாப் பாடகி விட்னி ஹூஸ்டனின் ஹோலோகிராம் உருவம் தோன்றி பாடியது. இதைப் பார்த்த ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். இதனை அடுத்து இந்த ஹோலோகிராம் நிகழ்ச்சி லண்டனின் 21 நகரங்கள் மற்றும் ஐரோப்பியாவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
