'ஆட்டிறைச்சியை' தூக்கிச் சென்ற 'தெரு நாய்'... வாயில்லா 'ஜீவன்' என்றும் பாராமல்... கறிக்கடைக்காரர் செய்த 'கொடூர' செயல்...

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Suriyaraj | Feb 26, 2020 02:05 PM

மஹாராஷ்ட்ராவில் கறிக்கடை ஒன்றில் தொங்கிக் கொண்டிருந்த ஆட்டிறைச்சியை தூக்கிக் கொண்டு ஒடிய தெரு நாயை கறிக்கடைக்காரர் கத்தியால் வெட்டிய சம்பவம் விலங்கு ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Street dog who stabbed a meat shopkeeper with a knife

மஹாராஷ்ட்ரா மாநிலம் சந்த்ரபூரில் கறிக்கடை ஒன்றில் தொங்கிக் கொண்டிருந்த ஆட்டிறைச்சியை தெருநாய் ஒன்று தூக்கிக் கொண்டு ஓடிவிட்டது. இதைக்கண்டு ஆத்திரமடைந்த கறிக்கடைக்காரர் கறி வெட்டப் பயன்படும் கத்தியை எடுத்துக் கொண்டு நாயை துரத்திக் கொண்டு ஓடினார். ஒரு இடத்தில் நாய் மீது கத்தியை தூக்கி வீசியுள்ளார். அதில் படுகாயமடைந்த நாய், இறைச்சியை போட்டுவிட்டு அலறியபடி ஓடியது.

இதையடுத்து, ஆட்டிறைச்சியை எடுத்துக் கொண்டு கடைக்காரர் சென்றார். சமூகவலைதளங்களில் இந்தக் காட்சி வெளியானதை அடுத்து, விலங்குகள் நல ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர். கறிக்கடைக்காரர் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags : #MAHARASHTRA #MUTTON STALL #SHOP KEEPER #STABBED #DOG