VIDEO: ‘தோனியை சூழ்ந்த ரசிகர் கூட்டம்’!.. மின்னல் வேகத்தில் BODYGUARD-ஆக மாறிய பெண் யார்..? வைரல் வீடியோ..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுரசிகர்கள் தோனியை சூழ்ந்தபோது சட்டென பாடி கார்டாக மாறிய பெண்ணின் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

இந்திய அணியின் விக்கெட் கீப்பரும், முன்னாள் கேப்டனுமான தோனி, உலகக்கோப்பை தொடருக்குப் பின் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடமல் உள்ளார். ஆனாலும் ரசிகர்கள் மத்தியில் அவருக்கு மவுசு குறைந்ததே இல்லை. தோனி குறித்த வீடியோ, புகைப்படம் உள்ளிட்டவை அடிக்கடி வைரலாகி வருவதே அதற்கு உதாரணம்.
இந்த நிலையில் சமீபத்தில் மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் ஒரு விளம்பர படத்தில் நடிப்பதற்காக தோனி வந்தார். உடனே அப்பகுதியில் கூடிய ரசிகர் கூட்டம் தோனி..தோனி என கத்திக்கொண்டே தோனியை சூழ்ந்தனர். அப்போது சட்டென வந்த பெண் ஒருவர் பாதுகாவலர் போல் தோனியின் முன்னாள் சென்று அவரை பத்திரமாக அங்கிருந்து அழைத்து சென்றார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானதை அடுத்து அப்பெண் யார் என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பினர்.
இதனை அடுத்து அவர் பெயர் சப்னா பவ்நானி என்பதும் அவர் தோனியின் தனிப்பட்ட சிகையலங்கார நிபுணர் என்பதும் தெரியவந்துள்ளது. இவர் பல பாலிவுட் நட்சத்திரங்களுக்கும் சிகையலங்காரம் செய்து வருகிறார். இந்த நிலையில் இந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள அவர், ‘10 சதவீத சிகையலங்கார நிபுணர், 90 சதவீத பாதுகாவலர், 500 சதவீதம் தோனியின் ரசிகை’ என குறிப்பிட்டுள்ளார்.
