‘காயத்துடன் சாலையோரம் தவித்த முதியவர்’.. ‘அம்மா’வாக மாறிய காவலர்.. குவியும் பாராட்டுகள்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Feb 17, 2020 09:56 AM

காயத்துடன் சாலையில் கிடந்த முதியவரை மீட்டு முதியோர் இல்லத்தில் சேர்த்த காவலருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

Puducherry police officer rescued old man near Anna nagar

புதுச்சேரி உருளையன்பேட்டை காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருபவர் மோகன். காரில் வந்த சிலர் அண்ணாநகர் பகுதியில் காயத்துடன் இருந்த முதியவரை இறக்கிவிட்டு சென்றதாக காவல் நிலையத்துக்கு தகவல் வந்துள்ளது. இதனை அடுத்து சம்பவ இடத்துக்கு காவலர் மோகன் சென்றுள்ளார். அப்போது சாலையோரமாக காயங்களுடன் பேச முடியாத நிலையில் முதியவர் ஒருவர் இருந்துள்ளார்.

உடனே அவருக்கு சாப்பிட உணவு வாங்கிக் கொடுத்துள்ளார். ஆனால் காயங்களுடன் இருந்த முதியவரால் உணவை எடுத்து சாப்பிடமுடியவில்லை. இதனால் தானே அவருக்கு உணவை ஊட்டிவிட்டுள்ளார். பின்னர் அவரை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்து, பின்னர் முதியோர் இல்லத்தில் சேர்த்துள்ளார். காவலரின் இந்த மனிதாபிமான செயல் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி பலரது பாராட்டுக்களையும் பெற்று வருகிறது.

Tags : #POLICE #OLDMAN #RESCUED #PUDUCHERRY