இப்படி கூட திருட முடியுமா?... அதிர்ச்சியில் தவித்த கல்லூரி மாணவி... சென்னையில் தொடரும் நூதன திருட்டு...

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Suriyaraj | Jan 03, 2020 05:37 PM

சென்னை அண்ணா சாலையில், ஆசீர்வாதம் செய்வது போல் நடித்து மாணவி ஒருவரிடமிருந்து நூதன முறையில் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Loot pretending to be a blessing - Theft in Chennai continues

சென்னை ராயப்பேட்டை பகுதியில் இலக்கியா என்ற மாணவி தனியார் விடுதியில் தங்கி சி.ஏ. படித்து வருகிறார். இவர் இன்று  அண்ணா சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த போது, திருநங்கைகள் 5 பேர் ஆசீர்வாதம் செய்வது போல அருகில் வந்துள்ளனர்.  இதை நம்பிய இலக்கியா தலையைக் குனிந்த நேரத்தில் திடீரென அவரது  கைப்பையை பிடுங்கிய திருநங்கைகள் அதில் இருந்த 5 ஆயிரம் பணத்தை எடுத்தனர். பின்னர் பையை வீசி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். திடீரென நடந்த இச்சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த இலக்கியா, செய்வதறியாமல் தவித்தார். பின்னர் சுதாரித்துக் கொண்டு இதுகுறித்து அண்ணாசாலை போலீசில் புகார் அளித்தார்.

போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நூதனக் கொள்ளையில் ஈடுபட்ட திருநங்கைகளை பிடிக்க போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். பல்வேறு துறைகளில் திருநங்கைகள் சாதனைகள் செய்து வரும் நிலையில், சிலர் இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபட்டு வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

சென்னையில் சமீபகாலமாக திருநங்கைகள் ஆசிர்வாதம் செய்வது போல நடித்து பணம் பறிப்பது தொடர்கதையாகி வருகிறது. 

Tags : #ROBBERY #LOOT #TRANSGENDER #LOOT PRETENDING #SNATCHING