குற்றவாளிகள் இனி தப்ப முடியாது... எக்ஸ்பிரஸ் ட்ரெயினில்... அறிமுகமாகும் புதிய வசதி... விவரம் உள்ளே!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Sangeetha | Dec 31, 2019 11:11 AM
குற்றங்களை தடுக்கும் வகையில் விரைவு ரயில் பெட்டிகளிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும் என ரயில்வே வாரியத் தலைவர் வினோத் குமார் யாதவ் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘ரயில்களில் நிகழும் குற்றங்களைத் தடுக்க தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக இந்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் இந்தியா முழுவதும் உள்ள 503 ரயில் நிலையங்களில், சிசிடிவி கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த சிசிடிவி கேமிராக்கள் பொருத்துவதற்காக, நிர்பயா நிதியின் கீழ் 500 கோடி ரூபாய் நிதியை ரயில்வே நிர்வாகம் பெற்றுள்ளது.
மேலும் அடுத்த 2 ஆண்டுகளில், அதாவது மார்ச் 2022-ம் ஆண்டுக்குள் 6,100 ரயில் நிலையங்களிலும், 58,600 விரைவு ரயில் பெட்டிகளிலும் (Coach) சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட உள்ளது. இதற்காக 2,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, அதற்கான டெண்டருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ரயில் பெட்டிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்துவதால், குற்றம் செய்பவர்கள், பெண்களிடம் சில்மிஷத்தில் ஈடுபடுவோரை எளிதில் கண்டறிய முடியும்.
அதே நேரத்தில் பயணிகளின் தனிமை பாதிக்கப்படாத வகையில், ரயில்பெட்டியின் பொதுவான இடத்தில் அல்லது கதவருகே கேமராக்கள் பொருத்தப்படும். மேலும், முக அங்கீகாரம் மற்றும் செயற்கை நுண்ணறிவு முறையில் குற்றவாளிகளை இனம் காணவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது’ என்று யாதவ் கூறியுள்ளார்.
