ரயில் நிற்பதற்குள் 'பிளாட்ஃபார்மில்' காலை வைத்து இறங்க முயன்ற 'பெண்'.. நொடியில் நேர்ந்த சோகம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Siva Sankar | Dec 30, 2019 07:02 PM

ரயிலில் இருந்து இறங்க முற்பட்ட பெண்ணின் கால்கள் ரயிலுக்கும் பிளாட்பார்முக்கும் இடையில் இருந்த இடைவெளியில் சிக்கி துண்டான சம்பவம் பதறவைத்துள்ளது.

woman lost her legs while de boarding from running train

டெல்லி நிஸாமுதீன் ரயில்வே நிலையத்தில் பெண் ஒருவர், நிற்கப்போகும் ரயிலில் இருந்து இறங்க முயற்சி, முதலில் தனது இடது காலை தரையில் வைத்துள்ளார். மீண்டும் இன்னொரு காலை எடுத்து வைப்பதற்குள், பிளாட்ஃபார்முக்கும் இடையில் இருந்த இடைவெளியில் அவரது கால்கள் சிக்கின.

ஆனால் அந்த பெண்மணி சற்றும் எதிர்பாராத வகையில், அவரது கால்கள் துண்டாகின. இந்த நிலையில், அவர் சிகிச்சைக்காக எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்தை அந்த ரயில் நிலையத்தில் இருந்தபடி நேரில் பார்த்தவர்கள் நடுநடுங்கிப் போயுள்ளனர்.