'சென்னையின்' முக்கிய வழித்தடங்களில்... 'மின்சார' ரெயில் சேவை ரத்து... விவரம் உள்ளே!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Manjula | Jan 01, 2020 01:54 PM

புத்தாண்டு தினமான இன்று சென்னையின் முக்கிய வழித்தடங்களில் ரெயில்கள் சேவை நிறுத்தப்பட்டுள்ளது.  எழும்பூர்-விழுப்புரம் பிரிவில் பராமரிப்பு பணி நடைபெறுவதால், கீழ்க்கண்ட மின்சார ரெயில் சேவையில் இன்று (புதன்கிழமை) மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Local Train Service Changed Today in Chennai, Details Listed

* செங்கல்பட்டு-சென்னை கடற்கரை இரவு 11.40 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில் தாம்பரம்-கடற்கரை இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

* தாம்பரம்-கடற்கரை இரவு 11.15, 11.30, 11.45 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில்கள் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. இதேபோல கடற்கரை-தாம்பரம் இடையே இரவு 11, 11.30, 11.45, 11.59 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

 

Tags : #TRAIN