பொங்கல் விடுமுறைக்கான சிறப்பு ரயில்... எங்கெல்லாம் இயக்கப்படுகிறது?... விவரம் உள்ளே!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Sangeetha | Jan 10, 2020 08:22 PM
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை வரும் செவ்வாய்கிழமை முதல் 3 நாட்கள் கொண்டாடப்பட உள்ளது. இதற்காக சென்னை போன்ற வெளி நகரங்களில் தங்கியிருக்கும் மக்கள் பொங்கலை குடும்பத்துடன் கொண்டாட சொந்த ஊர்களுக்கு கிளம்பிச் செல்வார்கள். இதனை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள், சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

அதன்படி பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் சென்னை-நெல்லை இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன.
நெல்லை-தாம்பரம்:
நெல்லையில் இருந்து ஜனவரி 11-ம் தேதி மாலை 6.15 மணிக்கு புறப்படும் சிறப்புக் கட்டண ரயில் (06002) , மறுநாள் அதிகாலை 5 மணிக்கு தாம்பரம் வந்து சேரும்.
தாம்பரம்-நெல்லை:
தாம்பரத்தில் இருந்து ஜனவரி 12-ம் தேதி இரவு 7.20 மணிக்கு புறப்படும் சுவிதா சிறப்பு ரயில் (82603), மறுநாள் காலை 6 மணிக்கு நெல்லை சென்றடையும். அங்கிருந்து ஜனவரி 18-ம் தேதி மாலை 6.15 மணிக்கு புறப்படும் சுவிதா சிறப்பு ரயில் (82604) , மறுநாள் அதிகாலை 5 மணிக்கு தாம்பரத்தை வந்து சேரும்.
நாகா்கோவில்-தாம்பரம்:
நாகா்கோவிலிலிருந்து ஜனவரி 19-ம் தேதி மாலை 5 மணிக்கு புறப்படும் சுவிதா சிறப்பு ரயில் (82606), மறுநாள் அதிகாலை 5 மணிக்கு தாம்பரம் வந்துசேரும்.
தாம்பரம்-நாகா்கோவில்:
தாம்பரத்திலிருந்து ஜனவரி 20-ம் தேதி முற்பகல் 11.20 மணிக்கு புறப்படும் சிறப்புக் கட்டண ரயில் (06075), மறுநாள் அதிகாலை 2 மணிக்கு நாகா்கோவில் சென்றடையும்.
திருச்சி-சென்னை:
திருச்சியில் இருந்து ஜனவரி 11-ம் தேதி பிற்பகல் 2.30 மணிக்கு புறப்படும் சிறப்புக் கட்டண ரயில் (06026), அதேநாள் இரவு 8.15 மணிக்கு சென்னை எழும்பூா் வந்து சேரும்.
எனினும் பொங்கல் சிறப்பு ரயில் இயக்கப்படுவதில் கோவை, திருப்பூர் தவிர்க்கப்பட்டுள்ளதால், பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். சென்னையில் வசிக்கும் அளவு தென்மாவட்டத்தினர் திருப்பூரிலும் உள்ளனர். கோவையில் இருந்து ரயில் இயக்காமல், கேரளா மாநிலத்தின் கொல்லம், எர்ணாகுளத்தில் இருந்தே ரயில் பயணத்தை துவக்குவது வாடிக்கையாகி விட்டதாக பயணிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
