darbar USA others

“பொங்கல் நெருங்கிடுச்சே?”.. “சென்னையில் இருந்து 4,950 சிறப்பு பேருந்துகள்!”.. “சிறப்பு ரயில்கள் பற்றிய விபரங்கள் உள்ளே!”

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Jan 08, 2020 11:43 AM

பொங்கல் பண்டிகையை கொண்டாடும் விதமாக, சொந்த ஊருக்கு செல்லும் பொது மக்களின் வசதிக்காக மொத்தம் 29 ஆயிரத்து 213 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.  இந்த சிறப்புப் பேருந்துகள், வரும் 12-ஆம் தேதி முதல் 14-ஆம் தேதி வரை, சென்னையிலிருந்து  வெளியூர்களுக்கு 4 ஆயிரத்து 950 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

TN Govt, Southern railways special bus, train service for pongal

சிறப்பு ரயில்களைப் பொருத்தவரை,  நாகர்கோவில் -தாம்பரம் சுவிதா சிறப்பு ரயில் நாகர்கோவிலில் இருந்து ஜன. 19ம் தேதி மாலை 5 மணிக்கு இயக்கப்படும் என்றும், தாம்பரம் - நாகர்கோவில் சிறப்பு ரயில் தாம்பரத்தில் இருந்து ஜன. 20ம் தேதி காலை 11.20 மணிக்கு இயக்கப்படும் என்றும், திருச்சி - எழும்பூர் சிறப்பு ரயில் திருச்சியில் இருந்து ஜன. 11ம் தேதி பிற்பகல் 2.30 மணிக்கு இயக்கப்படும் என்றும், நாகர்கோவில் - திருச்சி சிறப்பு ரயில் நாகர்கோவிலில் இருந்து ஜன. 14ம் தேதி காலை 10.15 மணிக்கு இயக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல்,  திருநெல்வேலி - தாம்பரம் சிறப்பு ரயில் நெல்லையில் இருந்து ஜன.11ம் தேதி மாலை 6.15  மணிக்கும், 12ம் தேதி மாலை 6.15 மணிக்கும், தாம்பரம் - திருநெல்வேலி சுவிதா சிறப்பு ரயில் தாம்பரத்தில் இருந்து ஜன. 12ம் தேதி இரவு 7.20 மணிக்கும், சென்னை எழும்பூர் -  திருநெல்வேலி சுவிதா சிறப்பு ரயில் எழும்பூரில் இருந்து ஜன.10ம் தேதி மாலை 6.50 மணிக்கும், 11ம் தேதி இரவு 11.50 மணிக்கும்  இயக்கப்படும் என்று தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Tags : #INDIANRAILWAYS #RAILWAY #TRAIN