‘சம்பளத்தில் மாற்றம் செய்ய’... ‘பிரபல நிறுவனம் எடுத்துள்ள முடிவு’... விவரம் உள்ளே!

முகப்பு > செய்திகள் > வணிகம்

By Sangeetha | Oct 19, 2019 11:52 PM

செலவுகளை குறைத்து, லாபத்தை அதிகரிக்கும் வகையில், பிரபல நிறுவனமான டிசிஎஸ், அந்நிறுவனத்தின் ஊழியர்களின் சம்பள கட்டமைப்பில் மாற்றம் செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

TCS is changing salary structure of these employees mumbai

பிரபல ஐடி நிறுவனமாக திகழ்கிறது டிசிஎஸ் எனப்படும் டாடா கன்சல்டன்சி நிறுவனம். இந்நிறுவனம், அதன் ஊழியர்களின் சம்பளத்திற்கான கட்டமைப்பு எனப்படும், பிரமிட் அமைப்பை மாற்ற முயற்சி செய்து வருவதாக (Pyramid rationalisation) அந்நிறுவனத்தின் CFO ராமகிருஷ்ணன் ‘எக்கனாமிக் டைம்’ இதழுக்கு தெரிவித்துள்ளார். புதிய பிரமிட் அமைப்பின்படி, குறைவான அனுபம் வாய்ந்த இளம் பொறியாளர்களை அதிகப்படுத்தியும், அதிக அனுபவம் வாய்ந்த குறைவான ஊழியர்களையும் கொண்டு செயல்பட அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. 

இதனால், டிஜிட்டல் தொழில்நுட்ப திறன் கொண்ட இளம்பொறியாளர்களை அதிகளவில் வேலைக்கு அமர்த்த முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இளம் பொறியாளர்கள் அதிகளவில் எடுக்கப்பட உள்ளதால், அதிக அனுபவம் வாய்ந்த ஊழியர்கள், கட்டாயமாக வெளியேற்றப்பட மாட்டார்கள் எனக் கூறப்பட்டுள்ளது. அதிக அனுபவம் வாய்ந்த ஊழியர்கள் சிறப்பாக செயல்படும்நிலையில், அவர்களின் ஊக்கத்தொகையை அதிகரிக்க முடிவு செய்துள்ளது.

மேலும் அந்நிறுவனத்தின் சார்பாக நடத்தப்படும் தேர்வில் அதிக அளவில் சாதிக்கும் இளம், மற்றும் அனுபவம் வாய்ந்த ஊழியர்களுக்கு சம்பளத்தை இரண்டு மடங்காக உயர்த்த திட்டமிட்டுள்ளது. இந்த நடவடிக்கையால், இளம் பொறியாளர்களுக்கு வேலைக் கிடைத்து, வேலை இல்லா நிலை உருவாகாது எனவும், டிசிஎஸ் நிறுவனம் புத்துணர்ச்சி பெற்று, புதுப்பொலிவுடன் இருக்கும் எனவும் டிசிஎஸ் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாது ஒப்பந்த செலவினங்களை குறைக்க, அயல்நாடுகளில், தற்காலிக ஊழியர்களுக்கு பதில், முழு நேர பணியாளர்களை அமர்த்தவும் திட்டமிட்டுள்ளது. கேம்பஸ் இண்டர்வியூ மூலம், 2020-2021 ஆண்டுகளில் அதிக அளவிலான இளம் பொறியாளர்களை எடுக்கவும் திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : #TCS #MUMBAI #JOB #INCREASE