'பள்ளி வாகனம் ஏறி'... 'உடல் நசுங்கி'... '3 வயது குழந்தைக்கு நடந்த பரிதாபம்!'...

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Manishankar | Jan 25, 2020 09:13 PM

சிறுமியைப் பின்தொடர்ந்து ஓடிய குழந்தை மீது பள்ளி வாகனம் ஏறியதில் அந்த குழந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சோகம் நிகழ்ந்துள்ளது.

3 year old dies after an accident with school bus

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் அடுத்த கரடிஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர், வேடியப்பன். அவருடைய 3 வயது மகன், குருபிரசாத். இன்று காலை வேடியப்பனின் உறவினர் மகள் தனது பள்ளி பேருந்தில் ஏறுவதற்கு சென்றுள்ளார். அவரைப் பின்தொடர்ந்து, குழந்தை குருபிரசாத் ஓடியிருக்கிறது. அதை கவனிக்காத சிறுமி பள்ளி வாகனத்தில் ஏறியுள்ளார். அச்சிறுமியின் பின்னால் ஓடிய குழந்தையும் பேருந்தில் ஏற முயற்சிக்கவே, இதை கவனிக்காத ஓட்டுனர் பேருந்தை இயக்கியுள்ளார்.

இந்நிலையில், குழந்தை குருபிரசாத் பேருந்தின் சக்கரத்தில் சிக்கியுள்ளது. இதனால், உடல்நசுங்கி சம்பவ இடத்திலையே பரிதாபமாக உயிரிழந்துள்ளது.

பின்னர், உயிரிழந்த குழந்தையின் உடலைக் கைப்பற்றி, காவல் துறையினர் பிரேத பரிசோதனைக்காக காவேரிப்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : #ACCIDENT #CHILD #BUS