'19 வயசு பொண்ணு'...'மரத்தில் தொங்கிய நிலையில் சடலம்'... நாட்டையே அதிரச்செய்துள்ள சம்பவம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Jeno | Jan 11, 2020 11:38 AM

19 வயது இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் நாட்டையே அதிரச்செய்துள்ளது.

Gujarat: Teen Girl Gang-Raped, Murdered, Body Hung from Tree

குஜராத் மாநிலம் ஆரவல்லி மாவட்டத்தை சேர்ந்த சேர்ந்த 19 வயது இளம்பெண் தனது சகோதரியுடன் மொடாசா நகருக்கு சென்றுள்ளார். ஆனால் அந்த பெண்ணின் சகோதரி மட்டும் வீட்டிற்கு வந்து விட அந்த பெண் மட்டும் மாயமானார். இதையடுத்து அந்த பெண்ணின் குடும்பத்தினர் அவரை பல இடங்களில் தேடியுள்ளார்கள். ஆனால் அந்த பெண் கிடைக்காத நிலையில், அவரது குடும்பத்தினர் போலீசில் புகார் செய்தனர். ஆனால் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்யாமல் அந்த பெண்ணின் சகோதரியிடம் விசாரணை மேற்கொண்டதாக கூறப்படுகிறது.

அப்போது பிமல் என்பவர் தனது சகோதரியை அவரது காரில் அழைத்து சென்றதாகவும், அதுகுறித்து யார் கேட்டாலும் கூறக்கூடாது என கடுமையாக கூறியதாகவும் அந்த பெண் கூறியுள்ளார். இதையடுத்து வழக்கு எதுவும் பதிவு செய்யாத காவல்துறையினர், காணாமல் போன பெண்ணின் பெற்றோரை அழைத்து, காரில் வந்த நபருக்கும் உங்களது மகளுக்கும் திருமணம் முடிந்து விட்டதாகவும், விரைவில் இருவரும் வீட்டிற்கு வருவார்கள் என் அவர்களை சமாதானபடுத்தி அனுப்பி வைத்துள்ளார்கள்.

இந்நிலையில் கடந்த 5ம் தேதி காணாமல் போன இளம்பெண், அங்குள்ள மரத்தில் பிணமாக தூக்கில் தொங்கினார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் பெண்ணின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள். அதில் அந்த பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தெரியவந்தது.

இதனையடுத்து பெண்ணின் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் ஆயிரக்கணக்கானோர் திரண்டு கொலையாளிகளை விரைவில் கைது செய்ய வேண்டும் என கூறி போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காவல்துறையினர் நடத்திய விசாரணையில் பிமல், தர்‌ஷன், சதீஷ் மற்றும் ஜிகர் ஆகிய 4 பேர் கும்பல், பெண்ணை கடத்தி கற்பழித்து கொலை செய்தது தெரியவந்தது.இந்த சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #RAPE #MURDER #GANG-RAPED #GUJARAT #HUNG #TEEN GIRL