‘கல்யாணத்துக்கு வரவங்க கட்டாயம் இத கொடுக்கணும்’.. மெசேஜ் அனுப்பிய மணப்பெண்.. மிரண்டுபோன கல்லூரி மாணவி..!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Selvakumar | Jan 21, 2020 06:09 PM

தனது திருமணத்துக்கு வருபவர்கள் நுழைவு கட்டணம் செலுத்த வேண்டும் என மணப்பெண் வினோத கண்டிஷன் போட்ட சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

Bride asks entrance fee from wedding guests, Gets trolled

அமெரிக்காவில் 26 வயது இளம்பெண் ஒருவர் தனது உறவினர்கள் அனைவருக்கும் செல்போனில் குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் தனது திருமணத்துக்கு வரும் விருந்தினர்கள் 50 டாலர் நுழைவு கட்டணம் செலுத்த வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த செய்தியைப் பார்த்த அவரது உறவுக்கார கல்லூரி மாணவி அதிர்ச்சியடைந்துள்ளார்.

உடனே இதுகுறித்து மணப்பெண்ணிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர், எனது திருமணத்துக்கு வரும் அனைவரும் 50 டாலர் நுழைவு கட்டணம் கட்டாயம் செலுத்த வேண்டும்.  Venmo என்ற மொபைல் கட்டண சேவை மூலம் முன்பணமாக நீ 50 டாலர் கொடுத்துவிட்டால், கல்யாண நாளன்று நுழைவு கட்டணம் செலுத்த வரிசையில் நிற்க தேவையில்லை. உன்னை ‘Exclusive Guest List'-ல் சேர்த்துவிடுகிறேன் என பதிலளித்துள்ளார்.

இதனால் கோபமான மாணவி, உனது திருமணத்துக்கு வர நாங்கள் ஏன் நுழைவு கட்டணம் செலுத்த வேண்டும் என கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு, திருமண நாளன்று நான் செய்யும் செலவுகளை ஈடுகட்டதான் இந்த ஏற்பாடு என தெரிவித்துள்ளார். இந்த பதிலால் கோபத்தின் உச்சிக்கே சென்ற மாணவி, உனது கல்யாணத்துக்கு வர எனக்கு விருப்பமில்லை என போனை துண்டித்துள்ளார். இதனை ரெடிட் (reddit) என்ற அமெரிக்க செய்தி மற்றும் விவாத வலைதளத்தில் அந்த கல்லூரி மாணவி பதிவிட்டுள்ளார்.

Tags : #BRIDE #AMERICA #WEDDING #ENTRANCEFEE #TROLLED