‘கொழுந்துவிட்டு’ எரியும் ‘10 மாடி’ வணிக வளாகம்... தீயை அணைக்கப் ‘போராடும்’ வீரர்கள்... ‘பரபரப்பு’ வீடியோ...
முகப்பு > செய்திகள் > இந்தியாசூரத்திலுள்ள 10 மாடிகள் கொண்ட வணிக வளாகத்தில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டுள்ளது.

குஜராத் மாநிலம் சூரத்திலுள்ள ரகுவீர் எனும் 10 மாடிகளைக் கொண்ட வணிக வளாகத்தின் தரைதளத்தில் இருந்த கடை ஒன்றில் இன்று அதிகாலை தீ பற்றியுள்ளது. இதையடுத்து சிறிது நேரத்தில் அடுத்தடுத்த கடைகளுக்கு தீ பரவ, மொத்த கட்டிடமும் கொழுந்துவிட்டு எரிந்துள்ளது. அங்கிருந்த கடைகளில் எளிதில் தீப்பற்றக்கூடிய பாலிஸ்டர் ரக துணிகள் அதிகளவில் இருந்ததால் தீ மளமளவெனப் பரவியதாகக் கூறப்பட்டுள்ளது.
தகவலறிந்த தீயணைப்புத் துறையினர் 57 தீயணைப்பு வாகனங்களுடன் சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள துணிகள் எரிந்து சாம்பலாகியுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. கடந்த 8ஆம் தேதி இதே கட்டிடத்தின் 4வது தளத்தில் தீ விபத்து ஏற்பட்டதும், அப்போது அங்கு முறையான தீத்தடுப்பு உபகரணங்கள் இல்லாததற்காக அபராதம் விதிக்கப்பட்டதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
