‘என்ன விட்டுட்டு போறாளா உங்கம்மா?’.. மனைவியை பழிவாங்க, மைனர் மகனுக்கு தந்தை செய்த உச்சகட்ட கொடூரம்!
முகப்பு > செய்திகள் > இந்தியாபெங்களூரைச் சேர்ந்த ரவுடி குமரேஷ் என்பவர் தன்னுடைய மனைவியுடன் அண்மையில் குடித்துவிட்டு வந்து தகராறு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து இவரை வரை விட்டுவிட்டு குமரேஷின் மனைவி தனது தாயார் வீட்டுக்கு தன் குழந்தையுடன் சென்று வாழத்தொடங்கிவிட்டதாக தெரிகிறது

ஆனால் தன் மனைவி தன் மகனை அழைத்துக்கொண்டு அவரது தாயார் வீட்டுக்கு சென்றதால் கோபம் தலைக்கேறிய குமரேஷ் தன் மகனை ஏதாதேதோ வார்த்தைகள் சொல்லி பேசி, தன் வீட்டுக்கு அழைத்துக்கொண்டு வந்துள்ளார். அங்குள்ள அறை ஒன்றில் வைத்து தனது மைனர் மகனுக்கு பாட்டிலில் மது ஊற்றி, அதைக் குடிக்கச் சொல்லி வாயில் வைத்து திணித்து, மூச்சுமுட்டக் கட்டாயப்படுத்தியுள்ளார்.
மதுவுக்கு சைட் டிஷ்ஷாக எதை எதையோ சாப்பிடச் சொல்லி வலியுறுத்துகிறார். தனது மனைவியை பழிவாங்கும் விதமாக இவ்வாறு தனது மகனை நடத்தும் ரவுடி குமரேஷின் இந்த வீடியோ இணையத்தில் வெளியானதை அடுத்து குமரேஷின், மனைவி காவல்துறை மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகள் மீட்பு குழுவினரிடம் முறையிட்டுள்ளார்.
அதன்பிறகு குமரேஷின் வீட்டு அறையில் இருந்த குழந்தை மீட்கப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தை அடுத்து குமரேஷ் தலைமறைவாகி விட்டதாக தெரிகிறது. அவரை போலீசார் தேடி வருகின்றனர்
