மறுபடியும் ‘கிங்’ என நிரூபித்த விராட் கோலி..! வெளியான டெஸ்ட் தரவரிசைப் பட்டியல்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Selvakumar | Jul 23, 2019 08:13 PM
டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கான தரவரிசைப் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது.

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான தரவரிசைப் பட்டியல் சில நாட்களுக்குமுன் வெளியாகி இருந்தது. இதில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பேட்டிங் தரவரிசைப் பட்டியலில் தொடர்ந்து முதல் இடத்திலேயே நீடித்து வந்தார். அதேபோல் பௌலிங் தரவரிசையில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா முதல் இடத்தை பிடித்து அசத்தினார்.
இந்நிலையில் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கான தரவரிசைப் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. பேட்டிங்கில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 922 புள்ளிகளை எடுத்து முதல் இடத்தை தக்கவைத்துள்ளார். இரண்டாவது இடத்தில் 913 புள்ளிகளுடன் நியூஸிலாந்து அணியின் கேப்டன் கேன்வில்லியம்சனும் மற்றும் இந்திய அணியின் பேட்ஸ்மேன் புஜாரா 881 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும் இருந்து வருகின்றனர்.
