‘குழந்தை பெற்ற 7வது நாளில் பெண்ணுக்கு நடந்த பயங்கரம்..’ பெற்றோர் செய்த அதிர வைக்கும் காரியம்..

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Saranya | Jun 29, 2019 10:43 PM

வேறு சாதியைச் சேர்ந்தவரைக் காதலித்து திருமணம் செய்த பெண்ணைப் பெற்றோர் அடித்தே கொலை செய்துள்ள சம்பவம் ஆந்திராவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Andhra Pradesh Woman murdered by parents in honour killing

சித்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஹேமாவதியும், கேசவலுவும் காதலித்து வந்துள்ளனர். இருவரும் வேறுவேறு சாதியைச் சேர்ந்தவர்கள் என்பதால் ஹேமாவதியின் பெற்றோர் அவர்களது காதலை எதிர்த்துள்ளனர். ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் ஊரை விட்டு வெளியேறிய ஹேமாவதியும், கேசவலுவும் திருமணம் செய்துகொண்டு வெளியூரில் வசித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த வாரம் பலமனேரியில் உள்ள அரசு மருத்துவமனையில் ஹேமாவதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. நேற்று மாலை கணவர் மற்றும் குழந்தையுடன் வீடு திரும்பிக் கொண்டிருந்த ஹேமாவதியை அவருடைய பெற்றோர் மற்றும் உறவினர்கள் வழிமறித்துள்ளனர். இருவரையும் மிரட்டித் தாக்கிய அவர்கள் ஹேமாவதியை இழுத்துச் சென்றுள்ளனர்.

ஹேமாவதியை அடித்துக் கொலை செய்தவர்கள் அவரது உடலைக் கால்வாயில் வீசியுள்ளனர். பிறந்து 7 நாட்களே ஆன அவருடைய குழந்தையை அங்கேயே விட்டுச் சென்றுள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்து குழந்தையை மீட்ட போலீஸார் ஹேமாவதியின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதையறிந்த கேசவலு தரப்பினர், ஹேமாவதியின் பெற்றோர் வீட்டுக்கு தீவைத்துள்ளனர். ஆணவக் கொலை மற்றும் தீவைப்பு சம்பவம் குறித்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags : #HONOURKILLING #BRUTALMURDER #ANDHRAPRADESH