‘காதலியின் நடத்தையில் சந்தேகம்’.. காதலன் செய்த மிரளவைக்கும் செயல்..! பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Selvakumar | Jul 15, 2019 05:04 PM

நடத்தையில் சந்தேக ஏற்பட்டதால் காதலியை கொலை செய்த காதலனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

19 year old girl killed by her boyfriend on suspicion of her character

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் பகுதியை சேர்ந்தவர் அஷ்ரஃப் ஷேக். இவரும் 19 வயது மாடல் பெண்ணான குஷி பரிகரும் காதலித்து வந்துள்ளார். குஷி பரிக்கர் மாடலிங்கில் ஈடுபட்டு வந்ததால் தொழில் ரீதியாக பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பலருடன் பலகி வந்துள்ளார். இதனால் குஷி பரிக்கரின் நடத்தையில் அஷ்ரஃப் ஷேக்கிற்கு சந்தேகம் எழுந்துள்ளது.

இதுதொடர்பாக இருவருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுறது. இந்நிலையில் கடந்த 12 -ம் தேதி இருவரும் காரில் நாக்பூர் நெடுஞ்சாலையில் பயணம் செய்துள்ளனர். அப்போது மீண்டும் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட, ஆத்திரத்தில் அஷ்ரஃப் தனது காதலி குஷி பரிக்கரை கொலை செய்து முகத்தை சிதைத்துள்ளார்.

இதனை அடுத்து நாக்பூர் நெடுஞ்சாலையில் பெண்ணின் சடலம் கிடந்தது தொடர்பாக வந்த தகவலை அடுத்து சம்பவ இடத்து சென்ற காவல் துறையினர் உடலை கைப்பற்றியுள்ளனர். பின்னர் இதுதொடர்பாக அப்பெண்ணின் காதலன் அஷ்ரஃப் ஷேக்கிடம் போலிஸார் நடத்திய விசாரணையில் குஷி பரிக்கரை கொலை செய்ததை அவர் ஒப்புகொண்டுள்ளார். இதனை அடுத்து அவரின் மீது வழக்கு பதிவு செய்த போலிஸார் இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : #KILLED #BOYFRIEND #GIRLFRIEND #SUSPICION #MAHARASHTRA