‘குடும்பத்தினரின் கண்முன்னே இழுத்துச் சென்ற கும்பல்..’ 12 வயது சிறுமிக்கு நடந்த கொடூரம்..

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Saranya | Jun 10, 2019 06:20 PM

உத்தரபிரதேசத்தில் குடும்பத்தினரின் கண்முன்னே 12 வயது சிறுமி 6 பேர் கொண்ட கும்பலால் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட கொடூர சம்பவம் நடைபெற்றுள்ளது.

12 year old girl dragged from home raped by six men in UP

சம்பவம் நடைபெற்ற அன்று சிறுமியின் குடும்பத்தினருக்கும் அந்த கும்பலுக்கும் இடையே கழிவுநீர்க் கால்வாய் அமைப்பது தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்தவர்கள் அந்த சிறுமியை குடும்பத்தினர் கண் முன்னாலேயே இழுத்துச் சென்றுள்ளனர். தடுக்க முயன்ற குடும்பத்தினரையும் அவர்கள் அடித்து உதைத்துள்ளனர். இழுத்துச் சென்ற சிறுமியை 6 பேர் கொண்ட கும்பல் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக 4 பேர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : #UP #GIRL