‘நண்பரின் மனைவி மீதான காதலால் செய்த பயங்கரம்..’ நாடகமாடிய கொடூரனை மடக்கிப் பிடித்த போலீஸ்..

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Saranya | Jun 26, 2019 01:22 PM

நண்பரின் மனைவி மீதான காதலால் நண்பரைக் கொலை செய்துவிட்டு நாடகமாடிய நபரைப் போலீஸார் கைது செய்துள்ளனர்.

Delhi Man bludgeons friend throws him on rail track

கடந்த 24ஆம் தேதி டெல்லி ஸகிரா ரயில் நிலையத்துக்கு குல்கேஷ் என்பவர் அவரது நண்பர் தல்பீருடன் வந்துள்ளார். சிறிது நேரம் அவருடன் பேசிக்கொண்டிருந்த குல்கேஷ் திடீரென செங்கல்லால் தல்பீரைத் தாக்கியுள்ளார். இதனால் மயக்கமடைந்த அவரைத் தண்டவாளத்தில் வீசியுள்ளார்.

ரயிலில் அடிபட்டு தல்பீர் இறந்ததை உறுதி செய்த பிறகு குல்கேஷ் போலீஸாருக்கு ஃபோன் செய்து இங்கு ஒருவரது உடல் தண்டவாளத்தில் துண்டுதுண்டாகிக் கிடப்பதாகக் கூறியுள்ளார். முதல்கட்ட விசாரணையில் போலீஸாரின் கவனத்தைத் திசை திருப்ப அவர் பல முயற்சிகளை எடுத்துள்ளார். கடைசியாக தல்பீரின் செல்ஃபோனை ஆய்வு செய்த போலீஸார் அவர் கடைசியாக குல்கேஷுடன் பேசியிருந்ததால் விசாரணையை அவர் பக்கம் திருப்பியுள்ளனர்.

பின்னர் தீவிர விசாரணையில் குற்றத்தை ஒப்புக்கொண்ட குல்கேஷ், தன்னுடைய நண்பரான தல்பீரின் மனைவி மீதிருந்த காதலால்தான்  இந்தக் கொலையைச் செய்ததாகக் கூறியுள்ளார். தல்பீரின் மனைவிக்கும் தன்னைப் பிடிக்கும், ஆனால் திருமணம் செய்து கொள்ள மறுப்பதால் நண்பரைக் கொலை செய்துவிட்டு அவரைத் திருமணம் செய்யத் திட்டமிட்டிருந்ததாகக் கூறியுள்ளார். இதில் வேறு யாருக்காவது தொடர்புள்ளதா எனப் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

Tags : #BRUTALMURDER