'எங்களுக்கும் தெரியும்.. நாங்களும் டீ போடுவோம்'.. யாருக்குலாம் வேணும்.. கலக்கிய மம்தா.. வைரல் வீடியோ!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Siva Sankar | Aug 22, 2019 04:49 PM

மேற்கு வங்க மாநிலத்தின் திகா பகுதியில், தனது பாதுகாப்பு படை வீரர்கள் புடசூழ சென்றுகொண்டிருந்த மம்தா பானர்ஜி, திடீரென காரை நிறுத்தச் சொல்லியிருக்கிறார்.

Mamata Banerjee prepares tea & serves it to locals video

அனைவரும் பதற்றமாகி நிற்க, எதைப் பற்றியும் யோசிக்காமல் இறங்கிய மம்தா பானர்ஜி அங்கிருந்த தேநீர் கடைக்குச் சென்று, ஏற்கனவே அங்கு நின்று டீ போட்டுக்கொண்டிருந்த தேநீர் மாஸ்டரிடம், தேநீர் ஆற்றும் குடுவையை வாங்கினார். சற்று நேரத்தில் கடை உரிமையாளரின் டிப்ஸை கேட்டு, கேட்டு சரிவிகிதத்தில், பால் டிக்காக்‌ஷனை கலக்கி, ஆற்றி சூடாக ஒரு டீ போடத் தொடங்கிவிட்டார் பானர்ஜி.

கூடியிருந்தவர்கள் பலரும் ஆச்சரியத்தில் உறைந்து நிற்க, டீ போட்டு முடித்ததும், தான் போட்ட டீயை அனைவருக்கும் விநியோகிக்குமாறு கேட்டுக்கொண்டதோடு, அமைச்சரவை சகாக்களான சுவேண்டு அதிகாரி, சுப்ரதா முகர்ஜி உள்ளிட்டோருக்கு அவரே டீயை கொடுத்தார்.

முன்னதாக, தி.மு.தலைவர் மு.க.ஸ்டாலின், நடிகர் மன்சூர் அலிகான் என பலரும் இவ்வாறு டீக்கடைகளுக்குச் சென்று ஓரிரு முகாம்களில் டீ போட்டு வைரலாகியது குறிப்பிடத்தக்கது.

Tags : #VIRALVIDEO #MAMATABANERJEE