‘யார் சொல்லியும் கேட்கல’.. ‘இளைஞர் எடுத்த விபரீத முடிவு’.. நெஞ்சை பதபதைக்க வைத்த வீடியோ காட்சி..!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Selvakumar | Aug 18, 2019 12:13 PM

குடும்ப பிரச்சனை காரணமாக மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் இருந்து இளைஞர் ஒருவர் குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

WATCH: Man jumps off water tank after wife refuses to return

தெலங்கானா மாநிலம் சித்திபேட்டை மாவட்டம் கடவெருகு கிராமத்தை சேர்ந்தவர் பொம்மல யாதகிரி. இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் யாதகிரிக்கும் அவரது மனைவிக்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் யாதகிரியின் மனைவி கோபித்துக்கொண்டு அவரது தாய்வீட்டிற்கு சென்றுள்ளார். யாதகிரி அழைத்தும் அவரது மனைவி வீட்டிற்கு வர மறுத்தாக கூறப்படுகிறது. இதனால் மனவேதனை அடைந்த யாதகிரி ஊரில் உள்ள மேல்நிலை நீர் தேக்க தொட்டி மீது ஏறி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

யாதகிரி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளது பற்றிய தகவல் அறிந்து அவருடைய குடும்பத்தினர் விரைந்து சம்பவ இடத்துக்கு சென்றுள்ளனர். அங்கு அவரை சமாதானம் செய்து கீழே இறங்குமாறு கேட்டு கொண்டுள்ளனர். ஆனால் யாதகிரி திடீரென்று மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றார். இதனால் படுகாயம் அடைந்த யாதகிரியை அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் உடனடியாக ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #TELANGANA #MAN #WIFE #WATERTANK #SUICIDE ATTEMPT #VIRALVIDEO