‘எக்ஸாமுக்கு வந்த மாணவியிடம்’... ‘பேராசிரியர் செய்த அதிர்ச்சி காரியம்’!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Sangeetha | Aug 22, 2019 01:23 PM

தேர்வறையில் மாணவியிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாகக் கூறி, உதவிப் பேராசிரியரை மாணவர்கள் துரத்திச் சென்று பிடித்து சரமாரியாகத் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Lecturer thrashed for misbehaving with student

தெலுங்கானாவின் கரீம் நகர் மாவட்டம் திம்மாப்பூரில் உள்ளது தனியார் பொறியியல் கல்லூரி. அந்தக் கல்லூரியில் கடந்த செவ்வாய்கிழமையன்று துணைத் தேர்வுகள் நடந்தன. இந்தத் தேர்வில் பங்குபெற, வேறு ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் முதலாமாண்டு படித்துவரும் மாணவி, அங்கு தேர்வெழுத வந்தார். அப்போது கல்லூரி ஆய்வகத்தில் உதவி பேராசிரியராக பணிபுரியும் வெங்கடேஷ் என்பவர், தேர்வெழுதிக் கொண்டிருந்த அந்த மாணவியிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

ஒருகட்டத்தில் இதனை சகித்துக் கொள்ள முடியாத அந்த மாணவி தேர்வு அறையில் இருந்து வெளியில் வந்து, இதுபற்றி சக மாணவிகளிடம்  கூறியுள்ளார். இதையடுத்து உதவிப் பேராசிரியர் வெங்கடேஷ் கடுமையாக பேசியதுடன், அங்கிருந்து தப்பிச் செல்ல எண்ணி ஓட்டம் பிடித்தார். ஆனால் மாணவர்கள் திரண்டு வெங்கடேஷை விரட்டிப் பிடித்தனர். பின்னர் சரமாரியாக அவரைத் தாக்கினர்.

உதவிப் பேராசிரியர் வெங்கடேஷ்க்கு எதிராக கல்லூரி நிர்வாகத்திடமும், காவல் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டது. புகாரைத் தொடர்ந்து கரீம் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வீடியோ பிபிஎன் சேனலில் வெளியிடப்பட்டுள்ளது.

Tags : #TELANGANA #STUDENT #THRASHES #VIRALVIDEO