'21 வயதுக்கு கீழ் உள்ளவர்களின் 'சிகரெட்' பழக்கம்'!... 'புதிய சட்டத்தால்'... விற்பனையாளர்களுக்கும் 'செக்' வைத்து... மத்திய அரசு அதிரடி!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Manishankar | Feb 24, 2020 12:32 PM

21 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு இனி சிகரெட் விற்பனை இல்லை என மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

centre to formulate a new policy framework for smoking

புகையிலை பொருட்களால் புற்றுநோய் உள்ளிட்ட நோய்கள் பரவுவதால் அதை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக, பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய பல்வேறு புகையிலை பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக கோவில்கள், பள்ளிகள், மருத்துவமனைகள் போன்றவை அமைந்துள்ள இடத்தில் குறிப்பிட்ட தூரம் வரை புகையிலை பொருட்கள் விற்பதற்கும் தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மேலும் சில கட்டுப்பாடுகளை கொண்டுவருவதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இது தொடர்பாக, மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அளித்த ஆய்வறிக்கையின் படி, 21 வயதுக்குட்பட்டவர்களுக்கு சிகரெட் முதலான புகையிலை பொருட்கள் விற்கக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இப்போது, அந்த வயது வரம்பு 18 ஆக இருக்கும் நிலையில், அதை 21 ஆக அதிகரிக்குமாறு அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், தடை செய்யப்பட்ட பகுதிகளில் புகையிலை பொருட்கள் விற்றால் குறிப்பிட்ட அபராதம் விதிக்கும் முறை அமலில் உள்ளது. இந்த அபராத தொகையை இன்னும் அதிகமாக உயர்த்த வேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த சிபாரிசுகளை ஏற்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதால், விரைவில் இது சட்டமாக கொண்டு வரப்பட்டு அமலுக்கு கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : #GOVERNMENT #SMOKING #POLICY