வீட்டை 'சுற்றிப்பார்க்க' 18-வது மாடிக்கு சென்ற இளைஞர்... தவறி விழுந்து... 'நொடியில்' நிகழ்ந்த பரிதாபம்!
முகப்பு > செய்திகள் > இந்தியாவீடு பார்க்க 18-வது மாடிக்கு சென்ற இளைஞர் தவறி விழுந்து இறந்த சம்பவம் பயங்கர அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

துபாயில் உள்ள நிறுவனம் ஒன்றில் கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் திரூர் பகுதியை சேர்ந்த சபீல் ரஹ்மான்(25) என்பவர் இன்ஜினியராக பணிபுரிந்து வந்தார். நேற்று முன்தினம் மாலை தான் வேலை செய்துவந்த சிலிகான் ஓஸிஸ் என்னும் பகுதிக்கு அருகேயிருந்த அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றிற்கு வீடு பார்க்க சென்றுள்ளார்.
அந்த கட்டிடத்தின் 18-வது மாடியில் சுற்றி பார்த்துக் கொண்டிருந்த ரஹ்மான் எதிர்பாராதவிதமாக அங்கிருந்து தவறி கீழே விழுந்தார். இதில் அவரது தலையில் பலத்த அடிபட்டது. சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அவரது உடலை அருகிலிருந்த மருத்துவமனைக்கு எடுத்து சென்றனர்.
வீட்டை சுற்றிப்பார்க்கும் போது எதிர்பாராதவிதமாக அவர் கீழே தவறி விழுந்து இருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அவரது உடலை விரைவில் இந்தியா கொண்டு வருவதற்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
