'அடிச்சான் பாரு யா பிரேக்கு'... 'ஓவர் டேக் பண்ணும் போது ஜஸ்ட் மிஸ்'... மெய்சிலிர்க்க வைக்கும் வீடியோ!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Jeno | Feb 19, 2020 02:49 PM

கேரள காவல்துறை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ காண்போர் பலரையும் மெய்சிலிர்க்கச் செய்துள்ளது.

Over-taking in curves is a risk, Kerala Police video goes viral

''வளைவுகளில் முந்தாதே'' என்ற வாசகம் சாலைகளில் பெரும்பாலும் காணப்படும். ஆனால் பலர் அதனைப் பெரிதாக எடுத்து கொள்வதில்லை. வளைவு இருந்தாலும், ஏன் தனக்கு முன்பாக ஏதேனும் வாகனம் இருந்தால் கூட அதனைப் பொருட்படுத்தாமல் பலரும் வந்த வேகத்தில் வளைவுகளில் திரும்பி ஆபத்தில் சிக்கியது உண்டு. அதே போன்று ஒரு சம்பவம் தான் தற்போது நடந்துள்ளது.

ஆனால் ஓட்டுநரின் சாமர்த்தியத்தால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. கேரளாவில் சாலை ஒன்றில் அரசு பேருந்து ஒன்று பயணிகளை இறக்கி விட்டுக் கொண்டு இருக்கிறது. அப்போது அதற்குப் பின்னால் நின்று கொண்டிருந்த சிறிய கார் ஒன்று, வளைவு என்றும் பாராமல் பேருந்தை ஓவர் டேக் செய்து கொண்டு முன்னேறி சென்றது. அப்போது காரின் எதிர்த் திசையிலிருந்து தீ அணைக்கும் வாகனம் ஒன்று வேகமாக வந்து கொண்டிருந்தது.

எதிர்த்திசையில் கார் வருவதைத் தக்க நேரத்தில் பார்த்த தீ அணைக்கும் வாகனத்தின் ஓட்டுநர் உடனடியாக பிரேக் போட்டார். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த வீடியோவை கேரள காவல்துறை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

Tags : #KERALA #ACCIDENT #OVER-TAKING #CURVES #KERALA POLICE