‘பிறந்து 93-வது நாளில் இறந்த குழந்தை’!.. ‘9 வருடத்தில் 6 குழந்தைகளை இழந்த பெற்றோர்’.. பிறந்த 1 வருடத்துக்குள் பலியாகும் மர்மம்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Selvakumar | Feb 19, 2020 11:49 AM

கேரள தம்பதிக்கு பிறந்த குழந்தைகள் அனைத்தும் ஒரு வருடத்துக்குள் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Kerala six Children deaths in a family over 9 years

கேரளா மாநிலம் மலப்புறம் பகுதியை சேர்ந்தவர்கள் ரபீக்-சப்னா தம்பதியினர். இவர்களுக்கு கடந்த 2010ம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. திருமணமாகி 9 வருடங்களில் 3 ஆண், 3 பெண் என 6 குழந்தைகள் பிறந்துள்ளன. இதில் 5 குழந்தைகள் பிறந்த ஒரு வருடத்துக்குள் இறந்துள்ளன. ஒரு பெண் குழந்தை மட்டும் நான்கரை வயதில் உயிரிழந்துள்ளது. ஆறாவதாக பிறந்த குழந்தை 93-வது நாளில் மரணமடைந்துள்ளது.

தொடர்ந்து ஒரே வீட்டில் 6 குழந்தைகள் உயிரிழந்த சம்பவத்தில் ஏதேனும் மர்மம் உள்ளதா என போலீசார் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். ஆனால் குடும்பத்தினரிடம் மேற்கொண்ட விசாரணையில், குழந்தைகள் இறந்ததில் மர்மம் ஏதுமில்லை என தெரியவந்ததாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் இறந்த குழந்தைகளில் பிரேத பரிசோதனை முடிவுகளும் இயற்கை மரணமடைந்ததாகவே மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். கேரள தம்பதியின் குழந்தைகள் அனைத்தும் ஒரு வருடத்துக்குள் இறந்த சம்பவம் மர்மமாகவே உள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

Tags : #KERALA #MALAPPURAM #CHILDREN #DIES