"விவசாயம் பண்ணது ஒரு குத்தம்மா?..." "அதுக்கு போயி புடிச்சு உள்ள வச்சுட்டாங்களே..." அப்படி என்ன விவசாயம் செய்தார் என்று நீங்களே பாருங்க...
முகப்பு > செய்திகள் > இந்தியாவீட்டில் விவசாயம் செய்து விற்பனை செய்து வந்த நபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதுக்கு போயி ஒருவரை கைது செய்வீர்களா என்று யோசிப்பீர்களேயானால், ஒரு முக்கியத் தகவல், அவர் வீட்டில் செய்தது கஞ்சா சாகுபடி.

கேரள மாநிலம் மூணாறு அருகேயுள்ள கட்டப்பனை பகுதியைச் சேர்ந்த மனு தாமஸ் என்பவர்தான் இந்த வேலையை செய்து வந்துள்ளார். அந்த இளைஞர், தனது வீட்டிலேயே கஞ்சா செடிகளை வளர்த்து, கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்து வந்துள்ளார். இதுகுறித்து ரகசியத் தகவல் கிடைத்த போதை தடுப்பு பிரிவு போலீசார் அவரது வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர்.
இதில், மனு தாமசின் வீட்டில் ஏராளமான கஞ்சாவும், கஞ்சா செடிகளும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை பறிமுதல் செய்த போலீசார், மனு தாமசை கைது செய்தனர்.
Tags : #KERALA #CANNABIS #YOUTH ARREST #KANNANUR
