'பெட் ரூமில் ரகசிய கேமரா'...'மனைவியின் ஆபாச வீடியோவை காட்டிய கணவன்'... அதிர்ந்து நின்ற நீதிபதி!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Jeno | Nov 23, 2019 03:37 PM

மனைவிக்கு தெரியாமல் படுக்கை அறையில் வைத்த கேமராவில் இருந்த வீடியோவை வைத்து, கணவன் விவாகரத்து பெற்றுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Karnataka Man Submits Wife\'s Sex DVD and Wins Divorce in Court

கர்நாடக மாநிலம் பெல்லாரி பகுதியைச் சேர்ந்த நபருக்கு கடந்த 1991-ம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. இந்த தம்பதிக்கு இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். இந்த நிலையில் வேலை நிமித்தமாக  கடந்த 2008-ம் ஆண்டு, பெங்களூருக்கு பயணம் செய்த அந்த நபர், படுக்கை அறையில் மனைவிக்கு தெரியாமல் கேமரா ஒன்றை பொருத்தி விட்டு சென்றுள்ளார்.

இதையடுத்து தனது பயணத்தை முடித்து விட்டு வீட்டிற்கு வந்து கேமராவை பார்த்தபோது அவர் அதிர்ச்சியில் உறைந்து போனார். அதிலிருந்த வீடியோவில் அந்த நபரின் மனைவி தனது ஆண் நண்பருடன் தனிமையில் இருந்தது பதிவாகியிருந்தது. இதனால் மனைவியிடம் இருந்து விவாகரத்து பெற நினைத்த அவர், பெல்லாரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அப்போது நீதிபதி விவாகரத்து பெறுவதற்கான காரணம் குறித்து கேட்கும் போது, அந்த நபர் மனைவி ஆண் நண்பருடன் இருந்த வீடியோவை காட்டியுள்ளார். அந்த வீடியோவை பார்த்த நீதிபதி அதிர்ந்து போனார்.

இதனிடையே வீடியோ குறித்து அறிந்த மனைவிக்கு அது பெரும் அதிர்ச்சியாக அமைந்தது. இதையடுத்து அந்த நபருக்கு விவாகரத்து வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். இந்நிலையில் பெல்லாரி நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து 2013-ம் ஆண்டு மனைவி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில், தனது கணவர் ஆபாசப்படங்களை படம் பிடிக்கும் ஆர்வம் உடையவர் என்றும், அவர் தன்னை கட்டாயப்படுத்தியதால் வேறு ஒரு ஆணுடன் இருப்பது போல நடித்தேன் என்றும் குறிப்பிட்டு, விவாகரத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கோரினார்.

இருதரப்பிலும் விசாரணை மேற்கொண்ட உயர்நீதிமன்றம் தனது தீர்ப்பில், கணவர் ஆபாசப்படங்களில் நடிக்க கட்டாயப்படுத்துவதாக கூறும் மனைவி அதுபற்றி, ஏன் புகார் அளிக்கவில்லை என்று கேள்வி எழுப்பியது. மேலும், பெல்லாரி நீதிமன்றம் வழங்கிய விவாகரத்தையும் நீதிபதிகள் உறுதி செய்து தீர்பளித்தார்கள்.

Tags : #KARNATAKA #WIFE #HUSBAND #SEX VIDEO #DIVORCE #DVD