கட்டாயப்படுத்தி ‘போதைப் பொருளுக்கு’ பழக்கி.. ‘கணவர் செய்த அதிர்ச்சிக் காரியம்’.. ‘பெண் மருத்துவருக்கு’ நேர்ந்த கொடூரம்..

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Saranya | Nov 21, 2019 05:24 PM

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் வேலை செய்த பெண் மருத்துவர் ஒருவர் தனது வீட்டிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

Haryana AIIMS Doctor Husband Parents Booked For Wifes Suicide

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் மருத்துவராக வேலை செய்த சோனம் மோடிஸ் என்ற பெண் ஹரியானாவில் உள்ள தனது வீட்டிலிருந்து கடந்த திங்கட்கிழமை சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார். அதிகமாக மயக்க மருந்து எடுத்துக்கொண்டதாலேயே அவர் உயிரிழந்ததாக பிரேதப் பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் சோனம் குறித்துப் பேசியுள்ள அவரது தந்தை, “மருத்துவப் படிப்பை முடித்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் வேலை செய்துகொண்டிருந்த என் மகள் சோனத்திற்கும், உடன் வேலை செய்த மருத்துவரான ஷிகர் மோர் என்வருக்கும் காதல் ஏற்பட்டது. இருவரும் மருத்துவர்கள் என்பதால் நாங்களும் மறுப்பு தெரிவிக்காமல் கடந்த மே மாதம் அவர்களுக்கு திருமணம் செய்து வைத்தோம். ஆனால் திருமணத்திற்கு பிறகு தான் ஷிகருடைய உண்மையான முகம் எங்களுக்குத் தெரியவந்தது.

திருமணம் முடிந்த சில மாதங்களிலேயே போதைப் பொருளுக்கு அடிமையானவரான ஷிகர் வரதட்சணை கேட்டு என் மகளை அடித்துத் துன்புறுத்தியுள்ளார். பின்னர் கட்டாயப்படுத்தி என் மகளுக்கும் அவர் போதைப் பொருளைக் கொடுத்துள்ளார். இதனால் சோனத்தின் உடல்நிலை மோசமாகி அவள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னரே இதுபற்றி எங்களுக்குத் தெரியவந்தது.

பின்னர் சோனத்தை சமாதானப்படுத்தி ஷிகருருடைய பெற்றோர் கொல்கத்தா அழைத்துச் சென்று தங்களுடன் வைத்திருந்தனர். ஆனால் அப்போது அவர்களும் அவளை அடித்துத் துன்புறுத்தியுள்ளனர். அதனால் எங்களுடன் வந்திருந்த சோனம் ஒரு விபத்தில் சிக்கி படுகாயமடைந்தாள். உடல்நிலை சரியான பிறகு அவள் செப்டம்பரில் தான் எய்ம்ஸில் மீண்டும் வேலைக்குச் சேர்ந்தாள். ஆனால் அங்கும் சென்று ஷிகர் அவளுக்கு தொல்லை கொடுத்ததால், ஹரியானா சென்று அங்கு ஒரு மருத்துவமனையில் வேலை செய்துவந்தாள்.

இறுதியாக கடந்த ஞாயிற்றுக்கிழமை தான் சோனத்திடன் ஃபோனில் பேசினேன். பின்னர் எவ்வளவு முறை அழைத்தும் எடுக்காததால் அக்கம்பக்கத்தினரிடம் கேட்க, அவர்கள் போலீஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அவர்கள் வந்து வீட்டின் கதவை உடைத்துப் பார்த்தபோது சோனம் இறந்த நிலையில் கிடந்தாள். ஷிகரும், அவருடைய குடும்பத்தினரும் தான் என் மகளை வற்புறுத்தி தற்கொலை செய்யத் தூண்டியிருக்க வேண்டும். தானாக தற்கொலை செய்துகொள்ளும் அளவிற்கு என் மகள் கோழை இல்லை” எனக் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சோனத்தின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் ஷிகர் மற்றும் அவருடைய பெற்றோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார், சோனம் பயன்படுத்திய ஊசி போன்றவற்றை தடவியல் துறை சோதனைக்கு அனுப்பியுள்ளனர். அதன் முடிவுகள் வந்த பின்னரே இது கொலையா, தற்கொலையா எனத் தெரியவரும் என அவர்கள் கூறியுள்ளனர்.

Tags : #HARYANA #AIIMS #DOCTOR #HUSBAND #WIFE #SUICIDE #DRUG