'என்ன எப்படி அலைய விட்டார் தெரியுமா'?...'எம்.எல்.ஏவை கத்தியால் குத்திய வாலிபர்'...அதிர்ச்சி வீடியோ!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Jeno | Nov 18, 2019 11:18 AM

திருமண வீட்டிற்கு சென்ற காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ ஒருவரை இளைஞர் கத்தியால் குத்தியுள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

K\'taka MLA Tanveer Sait Attacked by a Youth at a Wedding in Mysuru

கர்நாடக மாநிலம் மைசூரில் உள்ள நரசிம்மராஜா தொகுதியில் காங்கிரஸ் எம்.எல்.ஏ'வாக இருப்பவர் தன்வீர் சேட். முன்னாள் அமைச்சரான இவர், கர்நாடகாவின் மைசூரு நகரில் நடந்த திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக சென்றிருந்தார். அப்போது அங்கிருந்த வாலிபர் ஒருவர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து எம்.எல்.ஏ தன்வீர் சேட்டை குத்தினார். இதில் அவர் நிலைகுலைந்து கீழே சரிந்தார். கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த சம்பவம் அங்கிருந்தவர்களை அதிரச் செய்தது.

இதனிடையே அங்கிருந்த தப்ப முயன்ற அந்த இளைஞரை அங்கிருந்தவர்கள் உடனடியாக பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதன் பின்பு தன்வீர் சேட் மீட்கப்பட்டு உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து அந்த நபரிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், அந்த இளைஞர் மைசூரு நகரை சேர்ந்த பர்ஹான் பாஷா என்பது தெரிய வந்தது.

கைவினை கலைஞரான அவர் எதற்காக இந்த செயலில் ஈடுபட்டார் என்பது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகாத நிலையில், வேலை வாங்கி தருவதாக கூறி எம்.எல்.ஏ தன்வீர் தன்னை பலமுறை அலைய வைத்ததாகவும், அந்த விரக்தியில் அவர் இந்த செயலில் ஈடுபட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தாக்குதல் சம்பவம் திருமண நிகழ்ச்சியை படம் பிடிக்க வந்த புகைப்படக்காரர்களால் படம் பிடிக்கப்பட்டு உள்ளது. அந்த காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளன.

Tags : #CONGRESS #STABBED #KARNATAKA #MLA #CONGRESS MLA #TANVEER SAIT