‘காப்பாற்றாமல் வீடியோ எடுத்த நண்பர்கள்’.. ‘உதவி கேட்ட இளைஞருக்கு’.. ‘சில நொடிகளில் நடந்த பயங்கரம்’..

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Saranya | Nov 16, 2019 07:44 PM

கர்நாடகாவில் இளைஞர் ஒருவர் குட்டை நீரில் மூழ்கி உயிரிழப்பதை அவருடைய நண்பர்கள் வீடியோ எடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Karnataka Youth Drowns As His Friends Take A Video Of Him Dying

கர்நாடகாவில் கல்புர்கி மாவட்டத்தின் புறநகர் பகுதியிலுள்ள கல்குவாரி குட்டை ஒன்றில் நேற்று மாலை இளைஞர்கள் சிலர் குளிப்பதற்காக சென்றுள்ளனர். அங்கு குளித்து முடித்தபின், ஜாபர் என்ற இளைஞர் கரைக்கு நீந்தி வர முயற்சித்துள்ளார். ஆனால் நீந்த இயலாததால் அவர் தத்தளிக்க, கரையில் இருந்த அவருடைய நண்பர்கள் அவரைப் பார்த்து சிரித்துள்ளனர்.

பின்னர் நொடியில் தான் மூழ்குவதை உணர்ந்த ஜாபர் தண்ணீருக்கு வெளியே கைகளை நீட்டி நண்பர்களிடம் உதவி கேட்டுள்ளார். ஆனால் அவருடைய நண்பர்கள் அப்போதும் ஜாபருக்கு உதவாமல் அவர் நீருக்குள் மூழ்குவதை வீடியோ எடுத்துக்கொண்டிருந்துள்ளனர்.  இதையடுத்து நீரில் மூழ்கிய ஜாபர் மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் ஜாபரின் உடலை மீட்டு பிரேதப்பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் நடத்திய விசாரணையில், ஜாபருடைய நண்பர்களின் ஃபோனில் இருந்த வீடியோவிலிருந்து மேற்கண்ட தகவல்களை அவர்கள் உறுதி செய்துள்ளனர்.

Tags : #KARNATAKA #FRIENDS #VIDEO #HELP #DEAD