'பொண்டாட்டிய அனுப்பி வைங்க'..மாமியார் கழுத்தை நெரித்துக்கொன்ற மருமகன்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Manjula | Sep 24, 2019 01:51 PM

குடும்ப தகராறில் மாமியார் கழுத்தை நெரித்து மருமகன் கொலை செய்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Son In Law killed his mother in law in Salem District

சேலம் மாவட்டம் சங்ககிரி அருகில் உள்ள பாப்பான்காடு பகுதியை சேர்ந்த பேபி என்பவர் தனது மகள் தீபாவை வேலூர் மாவட்டத்தை சேர்ந்த கணபதி என்பவருக்கு திருமணம் செய்து வைத்துள்ளார்.கணபதி-தீபா இருவருக்கும் இடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக தீபா தனது அம்மா வீட்டிற்கு வந்து அங்கிருந்தே தனியார் நூற்பாலை ஒன்றில் வேலைக்கு சென்று வந்துள்ளார்.

இதற்கிடையில் கணபதி தனது மாமியார் வீட்டிற்கு வந்து மனைவியை தன்னுடன் அனுப்பி வைக்குமாறு கேட்டுள்ளார்.ஆனால் பேபி தனது மகளை கணபதியுடன் அனுப்பி வைக்க மறுத்து விட்டார்.இதனால் ஆத்திரமடைந்த கணபதி நேற்று காலை தனது மாமியார் வீட்டிற்கு வந்து தூங்கிக்கொண்டிருந்த மாமியாரின் கழுத்தை நெரித்துக் கொலை செய்து விட்டு,அங்கிருந்து தப்பியோடி விட்டார்.

இதனை அறிந்த சங்ககிரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிரேதத்தை கைப்பற்றி பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை சம்பவம் குறித்து போலீசார் தற்போது தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இந்த சம்பவம் சேலம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags : #SALEM #MURDER