'மகள்கள் தினத்தில்'... 'பிறந்து 20 நாளே ஆன’... ‘இரட்டை பெண் குழந்தைகளை'... 'தாய் செய்த கொடூர காரியம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Sangeetha | Sep 23, 2019 05:12 PM

பிறந்து 20 நாட்களே ஆன இரட்டை பெண் குழந்தைகளை வருமான குறைவால், தாய் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

mother Drown 20 Day Old Twin Daughters in uttar pradesh

உத்தரப்பிரதேச மாநிலம் முசாஃபர்நகர் நகர் பிக்கி கிராமத்தில் வசித்து வருபவர்கள் வசீம்-நஸ்மா தம்பதி. கடந்த 4 வருடங்களுக்கு முன்னர்தான் இவர்களுக்கு திருமணம் நடைப்பெற்றது.  ஒரு வயது குழந்தை உள்ளநிலையில், கடந்த 20 நாட்களுக்கு முன்னர் இரட்டை பெண் குழந்தைகள் பிறந்துள்ளது. கணவருக்கு வேலை இல்லாத நிலையில், இரட்டைப் பெண் குழந்தைகள் பிறந்ததால் நஸ்மா தவித்து போயுள்ளார். மேலும் குழந்தைகளை எவ்வாறு வளர்ப்பது என்ற சந்தேகமும் அவருக்கு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் வசீமின் வேலை இல்லாமை குறித்து, தம்பதிக்குள் சண்டை நடந்துள்ளது. இதனால், நஸ்மா தான் பெற்று 20 நாட்களே ஆன பச்சிளம் பெண் குழந்தைகள் இரண்டையும், ஊர் குளத்தில் வீச முடிவு செய்தார். அதன்படி, மகள்கள் தினமான கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று, அருகில் உள்ள குளத்தில் குழந்தைகளை தூக்கி எறிந்த அவர், கொலை செய்து விட்டதை உணர்ந்ததும், ஊரார் முன்னும், காவல்நிலையத்திலும் குழந்தை கடத்தப்பட்டதாக நாடகமாடினார்.

விசாரணையில், வேலையில்லாத தந்தைக்குப் பிறந்த குழந்தைகள், எதிர்காலத்தில் கஷ்டப்படும் என்பதால் குளத்தில் வீசிக் கொன்றதாக வாக்குமூலம் அளித்தார். தம்பதி இருவரையும் கைது செய்த போலீசார், ஊர் குளத்தில் இருந்து இரு குழந்தைகளையும் சடலமாக மீட்டனர். இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #UTTARPRADESH #INDIA #TWIN #DAUGHTERS #MOTHER