‘சாலையோரம் கிடந்த மின் வயரால்’.. ‘இளைஞருக்கு நடந்த பயங்கரம்’.. ‘பதைபதைக்க வைக்கும் வீடியோ’..

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Saranya | Sep 24, 2019 12:13 PM

சாலையோரம் கிடந்த மின்சார வயரை மிதித்த இளைஞரின் கால்களில் தீ பற்றி எரியும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது.

Navi Mumbai Boy steps on live wire catches fire shocking video

நவிமும்பையின் கைபர்கர்னே பகுதியில் உள்ள சாலையில் சுபம் சோனி என்ற இளைஞர் நேற்று நடந்து சென்றுகொண்டிருந்துள்ளார். அப்போது சாலையோரத்தில் பூமிக்கடியில் செல்லும் மின்சார வயர் ஒன்று வெளியே நீட்டிக் கொண்டிருந்துள்ளது. அதை கவனிக்காமல் சென்ற சுபம் சோனி அதை மிதித்ததும் திடீரென தீ பற்றியுள்ளது.

தீ நொடியில் அவருடைய பேண்டில் பற்றிக் கொள்ள வலி தாங்க முடியாமல் அவர் ஓடியுள்ளார். உதவி கேட்டு அலறிக் கொண்டே ஓடிய அவர் அருகிலிருந்த ஒரு பேரலில் இருந்த தண்ணீரைக் கொண்டு தீயை அணைத்துள்ளார். இதைத்தொடர்ந்து சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

25 சதவிகித தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சுபம் சோனிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மின்சார வயரை மிதித்ததும் அவர் மீது தீ பற்றுவது அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : #NAVIMUMBAI #ROAD #WIRE #FIRE #SHOCKING #VIDEO #VIRAL #LEGS #POWER #BOY