‘நள்ளிரவில் மனைவி இடமிருந்து வந்த ஃபோன்’... ‘பதறிப்போன கணவர்’!
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Sangeetha | Sep 24, 2019 05:17 PM
குழந்தைகள் படுத்திருந்த படுக்கையறையில், நள்ளிரவில் 6 அடி நீள பாம்பு ஒன்று கிடந்த சம்பவம் அவர்களது தாயை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
அரியானா மாநிலத்தின் சுல்தான்பூரைச் சேர்ந்தவர் ராஜேஷ் குமார். இவரது மனைவி மஞ்சலி. இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த திங்கள்கிமை இரவு, ராஜேஷ்குமார் வேலைநிமித்தமாக வெளியே சென்று இருந்தார். அவரது மனைவி மஞ்சலி மற்றும் குழந்தைகள் தூங்கிக் கொண்டிருந்தனர். நள்ளிரவில் ஒரு மணியளவில் ராஜேஷ் குமாரின் செல்ஃபோனுக்கு, மனைவியிடமிருந்து வந்த அழைப்பால் பதறிப்போனார். அதில், வீட்டில் படுத்திருந்த அவரது மனைவி மஞ்சலி, திடீரென நள்ளிரவில் கண் விழித்துள்ளார். பின்னர் விளக்கை போட்டுள்ளார்.
அப்போது தன் குழந்தைகள் படுத்திருந்த படுக்கையில், 6 அடி நீள நாகப்பாம்பு ஒன்று ஊர்ந்து கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அந்த பாம்பு அவரது மகனின் தலையணை அருகே இருந்தது. இதனால் பயந்து நடுங்கிய அவர், குழந்தைகளை எழுப்பி, அவர்களுடன் உடனடியாக அறையை விட்டு வெளியேறினார். மேலும் காப்பாற்றக் கோரி கூச்சலிட்டார். ஆனால் அண்டை வீட்டிலிருந்து எந்தவித உதவியும் வராததை அடுத்து, கணவரிடம் செல்ஃபோனில் கூற கேப் பிடித்து ஓடிவந்தார் ராஜேஷ்குமார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த ராஜேஷ் குமார், சிறுது நேரத்தில் வீட்டுக்கு வந்துள்ளார்.
அவர் தனியாக பாம்பை விரட்ட முயற்சித்தும் முடியாததால், அங்கிருந்த கிராம ஆட்களிடம் உதவி கோரியுள்ளார். அவர்கள் வனத்துறை அதிகாரிகளின் செல்ஃபோன் எண் தர, அவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையில், அவரது மகன் போர்வையை போட்டு பாம்பை மடக்கினான். சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறையினர் படுக்கையில் போர்வையால் மடக்கி வைக்கப்பட்ட பாம்பை பாதுகாப்பாக பிடித்துக்கொண்டு சென்றனர். பாம்பை படுக்கையைவிட்டு வனத்துறையினர் எடுத்துச்சென்ற பிறகே, படபடத்துக் கொண்டிருந்த மஞ்சலி மற்றும் அவரது குழந்தைகள் நிம்மதி அடைந்தனர்.