'மொதல்ல உல்லாசம்'...'அப்புறமா அதெல்லாம் நடக்கும்'...'20 பெண்களை கொன்ற ’சயனைடு' ஆசிரியர்'!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Jeno | Sep 23, 2019 04:20 PM

பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற சீரியல் கில்லர், ’சயனைடு’ மோகன் 16 வது வழக்கிலும் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Serial killer cyanide Mohan convicted in 16th murder case

கர்நாடக மாநிலம் பண்ட்வால் பகுதியைச் சேர்ந்தவர் மோகன் குமார். ஆசிரியராக பணியாற்றி வந்த இவர், தான் வனத்துறையில் பணியாற்றுவதாகவும் தனது பெயர் சுதாகர்  ஆச்சாரியா என கூறி பல பெண்களிடம் பழகியுள்ளார். பெண்களை தனது பேச்சால் மயக்கும் இவர், அவர்களோடு பாலியல் உறவு வைத்துள்ளார். அதன் பிறகு கருத்தடை மாத்திரை என சயனைடை கொடுத்து கொன்றுள்ளார். கடந்த 2003ம் ஆண்டில் இருந்து 2009ம் ஆண்டுக்குள் 20 பெண்களை சயனைடு கொடுத்து கொன்றுள்ளார்.

நாட்டையே உலுக்கிய இந்த இந்த சம்பவத்தில் மோகன் குமாருக்கு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் என குரல்கள் எழுந்தன. இதையடுத்து சுள்ளியா பகுதியைச் சேர்ந்த சுனந்தா, வம்படபதவு பகுதியைச் சேர்ந்த லீலாவதி, பாரிமார் பகுதியைச் சேர்ந்த அனிதா, மங்களுரைச் சேர்ந்த 22 வயது இளம்பெண் உட்பட 15 பேரை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற வழக்கில் அவருக்கு ஏற்கனே தண்டனை வழங்கப்பட்டு விட்டது.

இந்நிலையில் மோகன் கேரளாவைச் சேர்ந்த இசை ஆசிரியை ஒருவரை, பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததாக, அவர் மீது பெங்களூரு நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் அவர் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டது. தண்டனை விவரம் 25 ஆம் தேதி அறிவிக்கப்பட இருக்கிறது. இது அவர் மீது தொடுக்கப்பட்ட 16வது வழக்காகும். இன்னும் அவர் மீது சில வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : #KARNATAKA #BENGALURU #SEXUALABUSE #SERIAL KILLER #CYANIDE MOHAN