சடலத்தை கொண்டு செல்ல பாதை இல்லை..! ஆற்றில் நீந்தியபடி தூக்கிச் சென்ற அவலம்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Sep 20, 2019 11:46 PM

மயானத்துக்கு கொண்டு செல்ல பாதையில்லாததால் சடலத்தை ஆற்றில் நீந்தியபடி தூக்கிச்சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Swimming across the to cremate the corpse in Vellore

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அடுத்த சேர்பாடி கிராமத்தை சேர்ந்த பச்சையம்மாள் என்ற மூதாட்டி உயிரிழந்துள்ளார். இந்நிலையில் அவரது இறுதி ஊர்வலம் இன்று நடைபெற்றுள்ளது. மயானத்துக்கு கொண்டு செல்லும் வழியில் உள்ள கானாற்றில் மழை பெய்ததால் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியுள்ளது. ஆனால் மயானத்துக்கு செல்ல மாற்றுப்பாதை இல்லாததால் ஆற்றில் நீந்தியபடி மூதாட்டியின் சடலத்தை கொண்டு சென்றுள்ளனர்.

இதேபோல் அரியலூர் மாவட்டத்தில் உள்ள வக்காரமாரி கிராமத்தில் உயிரிழந்த மாரியம்மாள் என்ற பெண்ணையும் இரண்டு வாய்க்கால்கள் கடந்து கொண்டு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. மயானத்துக்கு செல்ல பாதை அமைத்துத்தர கோரி புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. மழைக்காலங்களில் இதுபோன்ற அவலநிலை ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் தங்களது வேதனையை தெரிவித்துள்ளனர்.

Tags : #RIVER #PLUNGE #VELLORE #DEADBODY #SWIMMING #CREMATE