‘காதலியின் பேச்சால்’... ‘ஆத்திரத்தில் காதலனின் வெறிச் செயல்’... ‘சிறுவனுக்கு நிகழ்ந்த விபரீதம்’... ‘நெஞ்சை உலுக்கும் சம்பவம்’!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Sangeetha | Sep 19, 2019 05:10 PM

அமெரிக்காவில், காதலியின் பேச்சால் பொறாமைக் கொண்ட காதலன்,  16 வயதே ஆன அப்பாவி பள்ளிச் சிறுவனை, நண்பர்களோடு சேர்ந்து நடுரோட்டில் குத்தி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

A 16 year old was fatally stabbed in a fight new york

நியூயார்க் நகரில் ஹாசீன் மோரிஸ்  என்ற 16 வயது சிறுவன், கடந்த ஞாயிறன்று இரவு விருந்து முடித்து வீடு திரும்பியுள்ளான். அப்போது, தனியே நடந்து சென்ற சக வகுப்பு மாணவியின் பாதுகாப்புக் கருதி, அவரது வீடு வரை ஹாசீன் மோரிஸ் உடன் நடந்து சென்றுள்ளான். இந்நிலையில், ஹாசீன் மோரிஸ், தன்னை வீடு வரை பத்திரமாக அழைத்து வந்ததாக, பொறாமையைத் தூண்டும் வகையில், தனது காதலனான டைலர் ஃபிளாக்கிடம், அந்த மாணவி கூறியதாகத்  தெரிகிறது.

இதனால் ஆத்திரமடைந்த அவரது காதலன், நண்பர்களோடு சேர்ந்து கடந்த திங்களன்று பள்ளி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த ஹாசீனை, பிரபலமான பீட்ஸா உணவகம் முன் சுற்றிவளைத்து சரமாரியாகத் தாக்கினான். கத்தியைக் கொண்டு நெஞ்சில் குத்தியதில், ரத்தம் சொட்டச் சொட்ட ஹாசீன் உயிருக்குப் போராடினான். இதனை சுமார் 50 முதல் 80 மாணவர்கள் வரை சுற்றி நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தனர்.

யாருமே சண்டையைத் தடுக்கவோ, உயிருக்குப் போராடிய ஹாசீனைக் காக்கவோ முன்வரவில்லை. மேலும் சம்பவத்தை தங்களது ஃபோனில் பதிவுசெய்த மாணவர்கள், சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். இதையடுத்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த காவல்துறையினர், கொலை வெறித் தாக்குதலில் 16 வயதே ஆன ஹாசீனை, மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். எனினும், சிறுவன் ஹாசீன் மோரிஸ் பரிதாபமாக உயிரிழந்தான்.

மிக அமைதியான சுபாவம் கொண்டவராகக் கருதப்படும் ஹாசீனை யாருமே காக்க முன்வரவில்லை என்று, அவரது குடும்பத்தினர் வேதனை தெரிவித்தனர். கடந்த புதன்கிழமையன்று, நண்பர்கள் மற்றும் உறவினர்கள் ஹாசீனுக்கு அஞ்சலி செலுத்தினர். இந்த சம்பவத்தின்போது அந்த மாணவி அங்கு இல்லை என்று கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய சுமார் 18 பேர் மீது வழக்குப்பதிந்து விசாரணை நடைப்பெற்று வருகிறது.

Tags : #USA #NEWYORK #BOY #TEEN